புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2014

ஜெனிவாவில் 18ம் மற்றும் 19ம் திகதி  இணைக் கூட்டங்களில் இறுதிபோரில் இருந்த சாட்சியாளர்
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 25வது கூட்டத்தொடரின் முதல் இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ளன. அடுத்து வரும் வாரமானது புயலுக்கு முன்னரான அமைதியை போல் மனித உரிமை பேரவையில், இலங்கை தொடர்பில் அதிகமான வாத விவாதங்கள் இன்றி முடிவடையலாம்.
எதிர்வரும் 18ம் மற்றும் 19ம் திகதிகளில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கை தொடர்பான இரண்டு இணைக் கூட்டங்களை நடத்த உள்ளன.
இதில் ஒரு கூட்டத்தில் எவரும் எதிர்பாராத சாட்சியாளர் ஒருவர் போர்க்களத்தில் நடைபெற்ற சம்பவங்களை சாட்சியங்களாக முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இம்முறை இலங்கை எந்த இணைக் கூட்டங்களையும் ஏற்பாடு செய்யவில்லை.
உறுப்பு நாடுகளை தம் பக்கம் இழுக்க அல்லது அந்நாடுகளை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவதை தடுக்கும் முயற்சிகளில் மட்டுமே அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.
இறுதி வாரத்தில் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு ரவிநாத் ஆரியசிங்க தலைமை தாங்குவார்.
அமெரிக்கா தலைமையிலான 5 நாடுகள் கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளது.

ad

ad