புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 மார்., 2014

இலங்கை கடற்கரையில் அனுஷ்காவுடன் குத்தாட்டம் போட்ட கோஹ்லி

இந்தியாவின் முன்னணி வீரரான வீராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடற்கரையில் குத்தாட்டம் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான வீராட் கோஹ்லியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது.
இருவரும் இணைந்து ஷாம்பூ விளம்பரம் ஒன்றில் நடித்த போது தான், நெருக்கம் ஏற்பட்டதாம்.
இதனை தொடர்ந்து ஒன்றாகவே பல இடங்களுக்கும் சுற்றி வருகின்றனர்.
சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா சுற்றுப் பயணத்திற்கு முன்பாக அனுஷ்காவை சந்தித்து விட்டு தான் கோஹ்லி புறப்பட்டார்.
இந்நிலையில் இருவரும் இலங்கை கடற்கரையில் காதல் விளையாட்டில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.
அனுஷ்கா சர்மா சூட்டிங்குக்காக இலங்கை சென்று இருந்தார், ஆசிய கிண்ணப் போட்டியில் விளையாடி விட்டு நாடு திரும்பியவுடன் கோஹ்லி காதலியை பார்ப்பதற்காக இலங்கை சென்றுள்ளதாக தெரிகிறது.
சூட்டிங் இல்லாத சமயத்தில் இருவரும் அங்குள்ள கடற்கரையில் ஒன்றாக இணைந்து சுற்றி திரிந்தனராம்.
ஆசிய கிண்ணப் போட்டியில் இறுதி போட்டிக்கு கூட இந்தியா தகுதி பெறவில்லை, தோல்வி பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அனுஷ்கா சர்மாவுடன் இலங்கை கடற்கரையில் கும்மாளம் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Virat Kohli, Anushka Sharm
a romance on the beach