புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 மார்., 2014

காங்கிரசுக்கு 100 இடங்கள் என்பது வேடிக்கையானது: ராகுல் காந்தி
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 100 இடங்கள் தான் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த கருத்து கணிப்பில், பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெறும் என்றும், காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவும் எனவும் வெளிவந்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, ''இதை பார்க்க எனக்கு வேடிக்கையாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதி. இதுபோன்ற தவறான செய்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.

மேலும், கருத்து கணிப்பில் வந்த தகவலால் காங்கிரஸ் கட்சிகாரர்கள் துவண்டு விடமாட்டார்கள். தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். சாதனைகளை சொல்லி காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரசாரம் செய்வார்கள்" என்று அவர் கூறினார்.