மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் நான் போட்டியிடவில்லை என ப.சிதம்பரம் கூறியிருந்தார். மேலும், தனக்கு பதிலாக தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தர வேண்டும் எனவும்,
எனக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சீட் தர வேண்டும் எனவும் காங்கிரஸ் மேலிடத்திற்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ப.சிதம்பரத்தின் இந்த கோரிக்கையை சோனியா மற்றும் ராகுல் காந்தி நிராகரித்து உள்ளனர். ப.சிதம்பரம் போட்டியிட்டால் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வேண்டும். இல்லை என்றால் சிவகங்கை தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என அவர்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தவிர ப.சிதம்பரத்திற்கு வேறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும் காங்கிரஸ் மேலிடம் திட்டவட்டமாக கூறி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.