புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014


10பக்கங்கள் கொண்ட  அறிக்கையை ஐ .நா .குழுவிற்கு அனுப்பவுள்ளேன்: சிவாஜிலிங்கம்

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்
மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவிடம் 10 பக்கங்கள் கொண்ட சாட்சியத்தை அனுப்பவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் நடைபெற்ற போர் நிறுத்த மீறல்கள், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட குழு விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
இது தொடர்பில் அவர்கள் இணைத்தளம் ஊடாகவும், ஊடகங்கள் ஊடாகவும் தமது வேண்டுகோளை பதிவு செய்துள்ளார்கள். ஆனால், இதுவரையில் எமது மக்கள் இது தொடர்பாக எந்தவித முனைப்பும் காட்டாமல் இருக்கின்றனர். மின்னஞ்சல், கடிதங்கள் மூலம் பொதுமக்கள் சாட்சியங்களை அளிக்க முடியும்.
எனது சாட்சியத்தில் கட்டாய கருத்தடை, தமிழர் பிரதேசங்களின் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள், காணி அபகரிப்புக்கள், இனப்படுகொலைகள் ஆகியவற்றை சாட்சியங்களாக உள்ளடக்கி அனுப்பவுள்ளேன்.
எங்களுக்கு எதிர்காலத்திலே நீதி கிடைப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச ரீதியாக ஒரு நட்டஈடு கிடைப்பதற்கும் அனுப்புகின்ற சாட்சியங்கள் உதவியாகவிருக்கும். சாட்சியங்களை பலருக்கு கொடுத்துவிட்டோம், இனி பயனில்லை என்று நினைக்காமல் ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்புக்களை செய்ய முன்வர வேண்டும்.
இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியினுடைய பிரமுகர்கள் பொதுமக்களுக்கு எந்தவகையிலும் உதவுவதற்கு தயாராக இருக்கின்றார்கள். உங்களுக்கு நேர்ந்த அவலங்களை பயமின்றி அனுப்புங்கள். இதுதான் எமது தாழ்மையான வேண்டுகோள்” என்றுள்ளார்

ad

ad