புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014

எபோலாவை அடக்க 600 மில்லியன் அமெரிக்க டொலர் 
 எபோலா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமானால் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுமென ஐ.நா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
எபோலாவின் தாக்கம் கடந்த 40 ஆண்டு கால வரலாற்றிலேயே தற்போது அதிகளவு பாதிப்பை எற்படுத்தியுள்ளது.
 
இதனால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் மார்கரெட் சான் கூறுகையில்இஎபோலா காய்ச்சலுக்கு இதுவரை 1,900 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 500 பேர் எபோலா வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். 
 
எபோலா வைரஸின் மறைமுக விளைவாக குழந்தைகளுக்கு ஏற்படும் தடுக்கக்கூடிய நோய்கள் கூட தடுக்கப்பட முடியாமல் அவர்கள் பலியாகின்றனர் என்று ஐ.நா. மேலும் தெரிவித்துள்ளது.

ad

ad