புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014


newsஅல்-குவைதாவை எதிர்கொள்ளும் திடம் இலங்கை இராணுவத்திடம் உண்டு: ருவான் வணிகசூரிய

அல்-குவைதா உள்ளிட்ட எத்தகைய தீவிரவாத அமைப்புக்களையும் எதிர்கொள்ள இலங்கை இராணுவம் தயாராக
உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

அல்-குவைதா தீவிரவாத அமைப்பு தெற்காசிய நாடுகளில் தமது
‘ஜிகாத்’தை (புனிதப் போர்) ஆரம்பிப்பதற்காக இந்திய உபகண்டத்துக்கான பிரிவை தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் அய்மன் அல்-ஷவகாரி கடந்த வியாழக்கிழமை காணொளி பதிவொன்றின் மூலமாக அறிவித்திருந்தார்.
அல்-குவைதாவின் இந்தப் பிரிவு குறிப்பாக, பர்மா, பங்களாதேஷ், இந்தியாவின் அஸாம், குஜராத், அகமதாபாத், காஷ்மீர் ஆகிய இடங்களை இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவப் பேச்சாளர், “இலங்கையில் எந்தப் பயங்கரவாதமும் தலைதூக்காமல் பாதுகாக்கும் வல்லமை இராணுவத்துக்கு உள்ளது. வெளியில் இருந்துவரும் எந்த தீவிரவாத அச்சுறுத்தலையும் தடுக்கும் ஆற்றலும் எமக்குள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ad

ad