புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014





ண்ணா அறிவாலயத்தில் உள்ள கலை ஞர் அரங்கம் நிறைந்து காணப்படுவது வழக்க மானதுதான். அன்றைக் கும் அப்படியே. கூடுத லாக, உணர்வின் அலை நிரம்பியிருந்தது. தி.மு.க. வின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வின் மனைவி தேவிகா ராணி அண்மையில் இறந்ததையொட்டி, ஆகஸ்ட் 26 அன்று அவ ரது படத்தைத் திறந்து வைத்துப் பேசினார் கலைஞர்.

அரசியல்வாதியாக- பேச்சாளராக திருச்சி சிவா பல இடங்களையும் சுற்றவேண்டிய நிலையில், குடும்பப்பொறுப்பைத் தாங்கிக்கொண்டவர் அவரது மனைவி தேவிகா ராணிதான். அது குறித்து உருக்கத்தோடு குறிப்பிடு கிறார் திருச்சி சிவா.

""பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதி யோடு விட்டுவிட்டு, பதி னேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டு கள் வாழ்ந்து, 49வயது முடியும் நேரத்தில் என் னைத் தனி மனிதனாகத் தத்தளிக்க விட்டு என் மனைவி போய்விட்டாள். அவள் தன் பொன்நகை களை கழட்டிக்கொடுத்துவிட்டு, புன்னகை யோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு. அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும் என் அருகே ஆறுதலாய் ஆதரவாய் இருந்தவள். மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைத்தேர்தல் பணி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் நான் சுற்றிக்கொண்டிருந்தபோது சிறிதும் முகம் சுளிக்காதவள். 

விருந்தோம்பல்-உபசரிப்பு இன்முகம் என என்னைக் காண வருவோர் அத்தனைபேருக் கும் அமுது படைத்தவர். தாய் போன துயரம் தெரியாமல் அந்த இடத்தையும் நிரப்பியவள். இதையெல்லாம் ஒருநாளும் நான் வாய்விட்டு வார்த்தையில் அவளிடம் சொன்னதேயில்லை.

நேரம் இல்லை என்றால் அது பொய். 32 ஆண்டுகளில் 10 நிமிடங்கள் கூடவா கிடைக்காமல் போயிருக்கும்? காலம் கடந்து பயன்படுத்தினால் பயனற்றுப்போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும்தானே? சரியான நேரத்தில் பயன் படுத்தாவிட்டால் மன் னிப்பு, நன்றி, காதல் என்று எந்த சொல்லுக் கும் உயிர் இருக்காது. பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள் ளையாய் இருந்தும் பேசா மலே வீணாக்கி, உணர்வு கள் இழந்து கிடந்தவ ளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன்.

தோழர்களே, தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். உங்கள் பிள்ளைகளை, உங்கள் பிரச் சினைகளை, உங்கள் உறவு களை சுமந்து, தேவை களைப் புரிந்து தீர்த்து, பொருளுக்கும் புகழுக்கும் நாம் வெளியே சுற்றும் போது காவல்தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கீ காரமாய் நாலுவார்த்தை கள் தயவு செய்து பேசுங் கள்...'' எனக் கண்ணீர் வேண்டுகோள் வைக்கி றார் திருச்சி சிவா.

ad

ad