புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014

குற்றவாளிகள் நிரபராதி ஆவது எப்படி- வழி சொல்கிறார் லக்ஸ்மன் கிரியல்ல 
ஆளும் கட்சியில் இணைந்து கொண்டால் எந்தவொரு குற்றச் செயலிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும் என  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.


நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாக  அரசாங்கம் 17ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்து நீதியின் சுயாதீனத்தன்மையை சீர்குலைத்துள்ளது.

17ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் காவல்துறை, தேர்தல், சட்ட மா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையையும் உறுதி செய்திருக்க முடியும்.

தற்போது சில காவல்துறை நிலையங்கள் ஆளும் கட்சியின், கிளைக் காரியாலங்களாகவே இயங்கி வருகிறது என அவர் குற்றஞ்சாடியுள்ளார்.

நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வருவதில்லை எனவும், நீதிமன்றின் சுயாதீனமற்ற தன்மையே இதற்கான காரணம் முதலீட்டாளர்களின் சொத்துக்களை பாதுகாக்க சுயாதீன நீதிமன்றக் கட்டமைப்பு அவசியமானது அவ்வாறான ஓர் முறைமை இல்லாத காரணத்தினால் முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க விரும்புவதில்லை .ஏனெனில் அரசாங்கம் எதேச்சதிகாரமாக செயற்பட்டு வருவதனால் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் பங்கேற்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad