புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014


சிரியாவில் போராளிகள் சிறைபிடித்துச் சென்ற 45 பிஜி அமைதிப்படை வீரர்கள் விடுதலை
சிரியாவில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய போராளிக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட பிஜி அமைதிப்படை வீரர்கள் அனைவரும்
விடுதலை செய்யப்பட்டனர்.

சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் மத்தியில் உள்ள பிரச்சினைக்குரிய பகுதியில் 1200 ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பிஜியைச் சேர்ந்த 45 வீரர்களை கடந்த மாதம் சிரிய போராளிக் குழுவினர் சிறைபிடித்துச் சென்றனர்.

அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக ஐ.நா. இன்று உறுதி செய்துள்ளது. சிரியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள குனித்ரா கிராசிங் பாயிண்டில் அவர்கள் விடுதலை செய்யப்பட்தாக ஐ.நா. துணை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

விடுதலை செய்யப்பட்ட வீரர்கள் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனைக்காக முகாமிற்கு திரும்ப உள்ளதாகவும் ஐ.நா. செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad