புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014




"நான்தான் கடவுள்' எனக்குள் இருக்கிற ஆத்மா... கிருஷ்ண பரமாத்மா. நான் கடவுளின் குழந்தை. ஆணும் பெண்ணும் சரிபாதி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் நான்தான்''.

இப்படி பக்தர்கள் முன் பிரசன்னமாகி பிரசங்கம் செய்வார் நித்யானந்தா. இந்த ஆண்டவ ரூபன் ஆண்மைப் பரிசோத னைக்கு வந்த சங்கதிதான் ஆல் இந்தியா பரபரப்பு மேட்டர்.

"நித்யானந்தா என்னை கற்பழித்துவிட்டார்!' என நித்தியின் சிஷ்யை ஆர்த்திராவ் கொடுத்த புகாரின் அடிப்படையில் "நித்யா னந்தாவுக்கு ஆண்மைப் பரி சோதனை நடத்த வேண்டும்' என  உச்சநீதிமன்றமே உறுதி செய்தது.

இந்த உத்தரவை அமல் படுத்த கர்நாடக சி.ஐ.டி. போலீ ஸார் தீவிரமாக களத்தில் இறங்கினர். "செப்டம்பர் 8-ந்தேதி!' என பரிசோதனைக்கு நாள் குறித்து... "பெங்களூரு விக்டோ ரியா மருத்துவமனை!' என இடமும் குறித்தனர்.

கர்நாடக மாநில டி.ஜி.பி. யைச் சந்தித்த சி.ஐ.டி. உயரதி காரிகள்... "நித்திக்கு ஆண்மைப் பரிசோதனை முடிந்ததும் குரல் பரிசோதனைக்காக மடவாலாவில் உள்ள லேப்புக்கு கொண்டு செல்ல வேண்டும். அதனால் மதியம் 2 மணிக்கு போக்குவரத்தை நிறுத்தி "ஜீரோ சிக்னல்' ஏற்படுத்தித் தர வேண்டும்' என கெஞ்சிக் கேட்டு சிறப்பு அனுமதி வாங்கினார்கள்.

கடந்த 6-ந்தேதி நித்தியை தொடர்பு கொண்ட சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி... ""நீங்க 8-ந் தேதி ஆண்மைப் பரிசோதனைக்கு காலை எட்டு மணிக்கெல்லாம் வந்திடணும். இதுல முக்கியமான விஷயம்... சாப்பிடாம வெறும் வயிற்றோடுதான் வரணும்னு டாக்டர்கள் தெரிவிச்சிருக்காங்க''' என்றார்.


"சாப்பிட்டுவிட்டு டெஸ்ட் எடுத்தா ரிப்போர்ட் தப்பா வரும்ல' என அற்ப மகிழ்ச்சியடைந்த நித்தி "எனக்கு சுகர் இருக்கு. நேரத் துக்கு சாப்பிடலேன்னா பாடி பயங்கர வீக் ஆயிடும்' என கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆரம் பித்தார். (நித்திக்கு சுகர் ப்ராப்ளம் இல்லை) விடவில்லை அந்த அதிகாரி. "சாப்பிடாம வரணும். அதுதான் மெடிக்கல் ரூல்ஸ். அதை மீறி சாப்பிடுறதுன்னா... ஃபுல் கட்டு கட்டிட்டே வாங்க. மறுபடி ஒரு நாள் தேதி குறிச்சு.. டெஸ்ட்டுக்கு கூப்பிடுவோம். எப்படி சாமி வசதி?' என அதிகாரி சொல்ல...

"அவ்வ்வ்வ்வ்'னு ஆகிப் போன நித்தி, "சாமி சாப்பிடாம லேயே வந்து சேரும்' எனச் சொல்லியிருக்கிறார்.

ஏழாம் தேதி சாயங் காலத் திலிருந்தே எல்லா மீடியாவுக்கும் தூக்கம் வரவில்லை. கர்நாடகத் தின் ஒன்பது நியூஸ் சேனல்களும் இரண்டு டீமாக பிரிந்து 8-ந்தேதி அதிகாலையிலேயே விக்டோரியா மருத்துவமனை வாசலிலும் நித்தியின் பிடதி ஆசிரம வாசலிலும் கூடிவிட்டனர் லைவ் டெலிகாஸ்ட் உபகரண வாகனங் களுடன்.

நித்திக்கு ஆண்மைப் பரி சோதனை செய்வதற்காக யூராலஜி டாக்டர் ரெத்கல், ரேடியோலஜி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ராமலிங்கம், ஹார்  மோன் மற்றும் பேத்தாலஜி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சுஜாதா சிக்கம்மா, ஜெனரல் ஃபிசிஷியன் டாக்டர் வெங்கட் மற்றும் நெப்ரா லஜி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வீரண்ண கவுடா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு, மருத்துவமனை டீன் முருகப்பா தலைமையில் காத்திருந்தன.

காலை 7 மணி. பிடதி ஆசிரமத்திற்குள்ளிருந்து ஃபோர்டு என்டோவர் காரில் முன் பகுதியில் நித்தி அமர்ந்திருக்க... பின்னால் நான்கு கார்களில் நித்தியின் சிஷ்யர்கள் அணி வகுக்க... கதி கலக்கும் வேகத்தில் "காவி கான்வாய்' கிளம்பியது.

"இதோ ஆசிரம கேட் திறந்தாச்சு. நித்தி கார் முன்ன போகுது. அவரோட ஆட்களின் கார்கள் பின்ன போகுது' சேனல் ஆட்கள் லைவ் கமெண்ட்ரி கொடுத்தபடி தங்களின் வாகனங் களில் பின் தொடர்ந்தார்கள்.

வேகமாக போய்க் கொண் டிருந்த நித்தியின் கார் ஒரு பைக் மீது மோத... பைக்கில் வந்தவர் தூக்கி வீசப்பட்டார். ஆனாலும் நிற்காமல் சென்றது கார் அணிவகுப்பு.

விக்டோரியா மருத்துவ மனை முன்பு காத்திருந்த மீடியாக்களுக்கு ஷாக். ஒரு காரில் நித்தி மருத்துவமனைக்குள் நுழைந்தார். உடனே பிடதியிலிருந்து பின் தொடரும் சக டி.வி. ஆட்களுக்கு போன் போட்டு... "நித்தி ஹாஸ்பிடலுக்குள்ள நுழைஞ்சிட்டாரு. நீங்க என்ன டான்னா... "இதோ வந்து கொண்டிருக்கிறார் நித்தி. இதோ போய்க்கிட்டிருக்கு நித்தி கார்'னு தப்பா கமெண்ட்ரி குடுக்குறீங் களே?' எனக் கேட்க... இவங் களுக்கு அதிர்ச்சி. அதாகப் பட்டது...

நித்தி முன்கூட்டியே கிளம்பிப் போய்விட்டார். மீடியாக் களை டைவர்ட் பண்றதுக்காக ஒரு டூப் நித்தியை "லைவ்' பண்றவங்க முன்னாடி உலவ விட்டிருக்கிறார் நித்தி.

"டுபாக்கூர் பார்ட்டி டூப் வச்சு ஏமாத்தி கண்ணாமூச்சி காட்டீருச்சே' என மீடியா இப்போ "அவ்வ்வ்' ஆனது.

நித்தியின் இந்த "டபுள் ஆக்ஷன்' போலீஸாரையே கொஞ் சம் குழப்பித்தான் விட்டது.

மருத்துவமனைக்குள்... தனது வக்கீல், நான்கு சிஷ்யை கள், தனது பெர்ஸனல் டாக்டர்... என ஒரு குரூப்பாத்தான் இருந்தார் நித்தி. தயாராக இருந்த மருத்துவ நிபுணர் குழு, நித்திக்கு பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் செய்தன.

"அந்த டெஸ்ட்டுக்கு எதுக்கு இந்த டெஸ்ட்? அது எதுக்கு? இது எதுக்கு?' என மருத்துவக் குழுவை நித்தி குரூப் குடைந்து குடைந்து கேட்டுக் கொண்டிருந்தன.

காலை பத்து மணிவாக்கில் நித்தி டிபன் சாப்பிட்டார். சிறிது ரெஸ்ட்டு விட்டு க்ளைமாக்ஸ் டெஸ்ட்டுக்கு அழைத்தனர்.

"அந்த டெஸ்ட் பண்ணிக்க முடியாது' என மறுபடி கண்ணைக் கட்ட வைத்தார் நித்தி.

"சாமிய சங்கடப்படுத்திப் பார்க்கணும்னு எங்களுக்கு ஆசையா? சுப்ரீம் கோர்ட் சொல்லிருச்சு. கடமையைச் செய்யணும். கோ-ஆபரேட் பண்ணுங்க சாமி' என சி.ஐ.டி. அதிகாரிகள் தெரி வித்தனர்.
ஆபாசப் படங்களும் தரப் பட்டன.

"நித்திக்கு ஆண்மைப் பரிசோதனை முடிந்தது' என "சக் ஸஸ் சக்ஸஸ்' பாணியில் மீடியாக் கள் "லைவ்'வடிக்க... மதியம் இரண்டு மணியளவில் சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டோம் நாம்.

""ஆண்மைப் பரிசோதனை இன்னும் முடியல. சாமி ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறார்'' என்றார். நித்தியின் ஒத்துழையாமை பற்றி சி.ஐ.டி. உயரதிகாரிகள் மட்டத்தில் லீகல் டிஸ்கஷன் நடந்தது.

"அவரு உடன்பட மறுக்கி றாரு. அதுக்காக வம்படியாக நாம அவரிடம் செயல்பட முடியுமா? பரிசோதனைக்கு நித்யானந்தா கோ-ஆபரேட் பண்ணலேன்னா... அது நித்திக்கு எதிராத்தான் அமையும்ங்கிறதை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வலியுறுத்துது. தொடர்ந்து பேசி சாமியை சம்மதிக்க வைக்க முயற்சிப்போம்' என முடிவெடுத் தனர். ஆனால் நித்தியோ திடீ ரென... "எனக்கு நெஞ்சு வலிக் குது... நிற்க முடியல... நடக்க முடியல' என டிராமா பண்ணினார்.

"நெஞ்சுவலிக்கு ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம் வாங்க சாமி' என போலீஸார் சொல்ல...

"எனக்கு ட்ரீட்மென்ட்டெல் லாம் வேணாம். என்னோட ஆசிர மத்துல கொண்டு வந்து விட்டு டுங்க' என கெஞ்ச ஆரம்பித்து விட்டார் நித்தி. "சாமி டிராமா போடுது' என்று முடிவு செய்த போலீஸார் "டெஸ்ட்டுக்கு உடன் படலேன்னா உங்களை அரெஸ்ட் பண்ண வேண்டியிருக்கும்' எனச் சொல்ல... நித்தி இறங்கி வந்தார்.

ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ள நித்தியால் முடியுமா? என்பதற்கான "டெம்பர்' டெஸ்ட் எடுக்கப்பட்டது. பிளட் டெஸ்ட்டிலேயே "உறவுக்குத் தகுதி உண்டா?' என்பதையும் கண்டறிவதற்கு வாய்ப்பும் உண்டு. ஏற்கனவே பிளட் டெஸ்ட் செய்யப்பட்டது. கற்பழிக்கப்பட்ட பெண்ணின் உறுப்பில் நித்தியின் "செமன்' இருப்பதை நிரூபிக்கத் தேவையான செமன் டெஸ்ட்டுக்கு நித்தி உடன்படவில்லை.


"நாங்கள் நித்யானந்தாவை ஃபோர்ஸ் பண்ணாமல்தான் டெஸ்ட் எடுத்தோம்' என மருத்துவக் குழு சொல்கிறது.

அடுத்தது குரல் டெஸ்ட்.

"நானும் ரஞ்சியும் இருக்கும் சி.டி.யை வெளியில் விடாதே. கிருஷ்ணபகவான் பண்ணாததையா நான் செய்துட்டேன். நான் கடவுள்டா. இதைப் பெரிசுபடுத்தாதே. உனக்கு எவ்வளவு வேணும்னாலும் பணம் தர்றேன்!' என தன் மாஜி சிஷ்யர் லெனின் கருப்பனிடம் நித்யானந்தா பேசிய ஆடியோ, பதிவு... நித்யானந்தா வழக்கில் மிக முக்கிய ஆதாரம். அதை உறுதி செய்ய நித்தியின் குரல் டெஸ்ட் அவசியம். இதை பெங்களூரு கோர்ட் வலியுறுத்தியிருக்கு. அதனால் கண்டிப்பா வாய்ஸ் டெஸ்ட் பண்ணியே ஆகணும்' என முடிவெடுத்தனர்.

நித்தியை வீல்சேரில் உட்கார வைத்து தள்ளிக் கொண்டு வந்து ஆம்புலன்ஸில் ஏற்றினர். மூன்று பிரம்மச்சாரி களும் உடன் இருந்தனர்.

மடவாலா என்ற இடத்தில் இருக்கும் லேபரட்டரிக்கு நித்தியை கொண்டு வந்தனர். அங்கும் எனக்கு மூச்சுத்திணறல், மூக்கு அடைக்குது, காது கேட்கலைன்னு குரல் டெஸ்ட்டுக்கு ஒத்துழைக்காமலேயே ரொம்ப நேரம் இருந்தார்.

இறுதியில் குரல் டெஸ்ட்டுக்கும் வேறு வழியின்றி உடன்பட்டார் நித்தி!

"ஆமாம். தப்பு நடந்து போச்சு. இனி நடக்காது' என ஒரே ஒரு உண்மையை நித்தி சொல்லிவிட்டு வேறு வேலையைப் பார்த்திருக்கலாம்.

உண்மை... நன்மை தரும்.

ஆனால்... ஒரு பொய் சொல்லி அதை மெயின்டன்பண்ண பலப்பல பொய்களைச் சொல் லியதால்... துரத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

"காயமே இது பொய்யடா எதுக்குச் சொல்லணும் மெய்யடா'.

அப்படித்தானே சாமீ.

ad

ad