புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014

அளுத்கம துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு  
அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஏற்பட்ட இனவாத தாக்குதல்களின் போது
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு களுத்துறை நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. தர்கா நகரில் இடம்பெற்ற வன்முறைகளில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கி பிரயோகம் காரணமாக இந்த மரணங்கள் சம்பவித்ததாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்தது. இதனடிப்படையில், சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு களுத்துறை மேலதிக நீதவான் அயேஷா ஆப்தீன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். அளுத்கம இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை கொழும்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சப்ராஸ் ஹம்சா, இரண்டு மரணங்களுக்கு துப்பாக்கி பிரயோகம் காரணமாக ஏற்பட்டது என பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. துப்பாக்கியின் தோட்டா தலை பகுதிக்குள் சென்றதால் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad