மத்தியிலும் மாநிலத் திலும் ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க. இருந்தபோது, மதுரை யின் அதிகார மையமாக அரசியல் செல்வாக்குடன் இருந்தார் மு.க.அழகிரி. இன்றோ, தயா பொறியியல் கல்லூரி காம்ப வுன்ட் சுவருக்கு அருகில் உள்ள கோயில் நிலத்தை ஆக்கிரமித்த தாக தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால முன்ஜாமீன் பெற்று, மதுரை எஸ்.பி. அலு வலகத்தில் உள்ள நில அபகரிப்பு பிரிவில் காலை 10 மணிக்கு நிபந்தனை கையெழுத் திட வேண்டிய நிலையில் இருக்கிறார்.
கடந்த 3-ஆம் தேதி மதுரை எஸ்.பி. அலு வலகத்துக்கு அவர் கிளம்பிய போது ‘அந்த வழக் கில்தானே ஜாமீன் பெற்றிருக்கின்றீர்கள்? இந்த வழக் குக்காக கைது செய்கிறோம்..’ என்று நடவடிக்கை எதுவும் எடுத்து விடுவார்களோ என்னும் பயம் அவரை ஆட்டிப் படைத்தது. ஆனாலும், தனது ஆதரவாளர்கள் புடை சூழ நிபந்தனை கையெ ழுத்திடுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டார்.
“அழகிரி அப்பா பெயரை இனிஷியலோடு எழுதுங்க...’’
""என்னங்க மணி பத்தாச்சு.. இன்னும் வரல..'' என்று ஏ.சி.கேட்க, ""“உங்க ஆபீஸ் கடிகாரம் பத்து நிமிஷம் தப்பா காட் டுது.. என் வாட்சை பாருங்க.. வேணும்னா எஸ்.ஐ.யம்மா வாட்சை பாருங்க..''’என்று மோகன் குமார் சொல்ல.. பார்த்து விட்டு ""ஆமா.. ஆமா.. பத்து நிமிஷம் ஃபாஸ்ட்டாத்தான் காட்டுது..''’என்றார் ஏ.சி. சரியாக 9-58க்கெல்லாம் உள்ளே நுழைந்தார் அழகிரி. ""இன்னும் ரெண்டு நிமிஷம் இருக்கு''.’’ என்றார் ஏ.சி. ""வெயிட் பண்ணுறேன்..''’என்று தலை யசைத்தார் அழகிரி. “""உட்காருங்க..''’என்று ஏ.சி. சொல்ல, அங்கிருந்த சேரில் உட்கார்ந்தார் அழகிரி. இரண்டு நிமிடங்கள் கடந்த நிலையில், அவரிடம் நோட்டு தரப்பட்டது. நோட்டைப் பிரித்துப் புரட்டிய அழகிரி, அதில் தந்தையின் பெயரைப் பார்த்ததும்....