புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014


பிரான்சில் அதிபர் ஹோலண்டே செல்வாக்கு சரிந்தது தேர்தலுக்கு முன்பு பதவி விலக வலியுறுத்தல்

பிரான்ஸ் நாட்டின் அதிபராக பிராங்கோயிஸ் ஹோலண்டே பதவி வகித்து வருகிறார். இவரது செல்வாக்கு குறித்து ஒரு பத்திரிகை பொது மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தியது.


கடந்த 8 மற்றும் 9–ந்தேதிகளில் ஆன்லைனில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்று வாக்களித்தனர்.

அதில், 62 சதவீதம் பேர் அதிபர் ஹோலண்டேவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அவர் தனது அதிபர் பதவிக் காலத்துக்கு முன்பாகவே அதாவது 2017–ம் ஆண்டுக்கு முன்பே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இரண்டாம் உலகபபோருக்கு பிறகு பிரான்சில் பெரும்பாலான மக்களால் வெறுக்கப்படுகின்ற, விரும்பபடாத அதிபராக இவர் திகழ்கிறார். இவரது ஆட்சி காலத்தில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. அதனால் நான் பொது மக்கள் இவர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஆகவே 3 வருடத்துக்கு முன்பே அவர் பதவி விலக வேண்டும் என் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே கடந்த வாரம் இங்கிலாந்தில் வேல்ஸ் சில் நடந்த நேட்டோ மாநாட்டில் ஹோலண்டே கலந்து கொண்டார். அவரிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. ‘‘அதற்கு பதில் அளித்த அவர் இதுபோன்ற வாக்கெடுப்புகளால் என்னை பதவி இறக்க முடியாது. எனது பதவிக்காலம் முடியும் வரை அதிபராக நீடிப்பேன்’’ என்றார்.

இதற்கிடையே ஹோலண்டேயின் முன்னாள் காதலி வலேரி டிரையர்வெய்லர் எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியானது. அதில், ‘‘ஹோலண்டேவுக்கு ஏழகளை பிடிக்காது. அவர்களை அவர் விரும்பமாட்டார்’’ என கூறியுள்ளார்.

அந்த புத்தகம் விற்பனையில் சக்கைபோடு போடுகிறது. பல ஆண்டுகளில் இந்த புத்தகம்தான் அதிக அளவு விற்று தீர்ந்துள்ளது என வெளியீட்டாளர் தெரிவித்துள்ளார்.

ad

ad