புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014

வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் பணம்: சென்னையில் கைதான இலங்கையருக்கு விளக்கமறியல்
சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளி என சந்தேகிக்கப்படும் இலங்கையரான அருண் செல்வராஜை,எதிர்வ வரும் 25ம் திகதி வரை சிறையில் அடைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த நபரை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
இவரது வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில் டைரி, வரைபடங்கள், இந்தியா, இலங்கை கடவுச் சீட்டுக்கள் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவரது வங்கி கணக்கில் இந்திய ருபாய் 2 கோடி வரை பணம் இலங்கையில் இருந்து இணையம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் இவருக்கு உளவு பார்த்ததற்கான கூலியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசேன், கடந்த 2012-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி ஆகியோருடன் அருண் செல்வராஜூக்கு இடையே நிறைய தகவல் பரிமாற்றங்கள் நடந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், சாலிகிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து நீண்டநாள் தங்கியிருப்பதும், சென்னையில் முக்கிய இடங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் உளவு பார்த்திருப்பதும், பல முக்கிய இடங்களைப் படம் பிடித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அருண் செல்வராஜை வரும் 25ம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

ad

ad