புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014

ஜெயலலிதா விடுதலையாவாரா _

""ஹலோ தலைவரே.. கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆயி டிச்சி. 10, 9, 8ன்னு செப்டம்பர் 20க்கு நாட்கள் குறைஞ்சிக்கிட்டே வருது.''

""அதுதான் கார்டன் தரப்பில் 99% நம்பிக்கை இருப்பதையும் 1%தான் தயக்கம் இருக்குதுன்னும் நம்ம நக்கீரனில் டீடெய்லா எழுதியிருந்தாங்களே!''

""அந்த 1% எப்படி இருக் கும்ங்கிற யோச னையும் பதட்ட மும் அதிகரிச் சிக்கிட்டேதான் இருக்குதாம். ஜெ.வுக்கு எதிர்த் தரப்பில் வாதாடி யவங்க வட்டாரத் தில், இந்த கேஸ் பற்றிக் கேட் டேங்க தலை வரே.. அவங் களோ 99% கன்ஃபார்ம்னு சொல்றாங்க. 1991-96ல் ஆட்சியிலே இருந் தப்ப மாசம் 1 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குன தா சொன்ன ஜெ. வருமானத் துக்கு அதிகமா 66 கோடி ரூபாய்க்கு சொத்துகளை குவிச்சிருக்காருங்கிறதுதான் இத்தனை காலமா இழுத் தடிக்கப்பட்ட இந்த வழக்கோட அடிப்படை.''

""அந்த சொத்துகளும் அதற்கான பணமும் எப்படி வந்ததுங்கிறதைத்தான் ஜெ.


தரப்பு கோர்ட்டில் சொல்லி யிருக்குதே?''

""அதைப்பற்றித் தான் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் விவரமா சொல்றாங்க. புடவை, நகை, செருப்பு போன்ற பர்சனல் அயிட்டங்கள், வளர்ப்பு மகன் திருமணம் இது சம்பந்தமான மதிப்பு அதிக பட்சம் 16 கோடி ரூபாய்னு வச்சிக் கிட்டாலும் மிச்சம் உள்ள 50 கோடி ரூபாய்க்கு சரியான கணக்கு இல்லை யாம். நமது எம்.ஜி.ஆர் பத்தி ரிகைக்கு டெபா சிட்டா வசூலிச் சது 25 கோடி ரூபாய்னு ஜெ. தரப்பு கணக்கு காட்டியிருக்குது. வக்கீல்கள் என்ன சொல்றாங்கன்னா, ஒரு பொது ஊழி யர், தெரிந்த வரவினங்களுக்கு அதிகமாக (source of known income)பணம் சம்பாதிப்பது தொடர்பான சட்டம் 1988 வரைக்கும் இருந்த நிலைமையே வேறாம். அப்ப இந்த மாதிரி வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை, என் மனைவி மூலமா வந்த வரதட்சணை, குதிரை ரேஸில் சம்பாதிச் சதுன்னு சொல்லி பலரும் தப் பிச்சிக்கிட்டிருந்தாங்க. அதனால, தெரிந்த வரவினம் என்பது சட் டப்படியான வழியில் வந்திருக்கணும்னும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுடிச்சாம். ஏற்கனவே உரிய துறையோட அதிகாரிகளுக்கும் தகவல் சொல்லணும்னு இருக்கு.''

""உரிய துறையோட அதிகாரிகள்னா?''

""ஜெயலலிதா, முதல்வர்ங்கிற பொதுஊழியர். அவர், கவர்னர்கிட்டே தெரிவிக்கணும். நீதிபதிகளாக இருப்பவங்க தலைமை நீதிபதிகிட்டே கணக்குகாட்டணும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்னா அர சாங்கத்துக்கிட்டே கணக்கு சொல்லணும். மற்றவங்க ளெல்லாம் வருமானவரித்துறைகிட்டே கணக்கு காட்டணும். ஜெ. விவகாரத்தைப் பொறுத்தவரை, 91முதல் 96வரை சேர்க்கப்பட்ட வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சம்பந்தமா 96லே தி.மு.க ஆட்சியில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. 98-ல் சார்ஜ் ஷீட் போடப்பட்டது. அதற்கப் புறம்தான் ஜெ. தரப்பு, வருமானவரித் துறையிலே எங்களுக்கு இந்தந்த வகையிலே வருமானம் வந்ததுன்னு கணக்கு காட்டியிருக்குது.''

""வருமானவரித்துறை அதிகாரி கள் என்ன சொல்றாங்க?''

""அவங்க அப்பவே அதற்கான வரியைக் கட்டச் சொன்னதோடு, தெரியாத வழிகளில் வந்த வருமானம்னு (income from unknown sources) சர்டிஃபை பண்ணிட்டாங்க. இதற்காக தனி வழக்கே போடலாம். அப்படி போடப்பட்டதுதான் எழும்பூர் கோர்ட் டிலே நடக்கிற வருமான வரி வழக்கு. இதையெல்லாம் நம்மகிட்ட சுட்டிக் காட்டுன வக்கீல்கள் மறுபடியும் பெங்களூரு கேஸ் பற்றி டீடெய்ல்களுக்கு வந்தாங்க. அதாவது, நமது எம்.ஜி.ஆர் பத்திரிகைக்கு 25 கோடி ரூபாய் சட்டப்படி டெபாசிட் வசூலித்திருக்கோம்ங்கிறது ஜெ. தரப்பு வாதம். ஆனா ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ஏற்கனவே அனுப்பியிருக்கிற சர்க்குலரில் பதிவு செய்யப்பட்ட கம்பெனிகள் தவிர வேறு யாரும் டெபாசிட் வசூலிக்க கூடாதுன்னு சொல்லியிருக்குது. நமது எம்.ஜி.ஆரோ டெபாசிட் வசூலிப்பதற்கான அனுமதியைப் பதிவு செய்யாத கம்பெனின்னு எதிர்த்தரப்பு வைத்த வாதத்துக்கு ஜெ. தரப்பில் சரியான பதில் இல்லையாம். அதோடு, சொத்துக் குவிப்பு வழக்கில் சார்ஜ் ஷீட் போடப்பட்ட பிறகுதான் நமது எம்.ஜிஆர் கணக்கை சரி பண்ணும் வேலைகள் நடந்திருக்குதாம்.''

""பீகார் முதல்வரா இருந்த லாலு பிரசாத் யாதவ் மீதான கேஸிலும் இப்படித்தான் எஃ.ப்.ஐ.ஆர். போடப்பட்ட பிறகு, சரி பண்ணும் வேலைகள் நடந்தன. ஆனா, பாட்னா கோர்ட் இதை ஏத்துக்கலை.''

""அதையும் வக்கீல்கள் என்கிட்டே சொன் னாங்க தலைவரே... ஜெ. தரப்பில் காட்டப்படும் இந்த 25 கோடி டெபாசிட்டும் அதே மாதிரி கணக்குதான்னு சொல்றாங்க. அப்புறம், சொத்து மதிப்புகள்  அதிகப்படுத்தி போட்டிருப்பதா ஜெ. தரப்பு வாதாடியிருக்குது. பத்திரத்தில் என்ன மதிப்பு இருக்குதோ அதைத்தான் அரசுத்தரப்பு குறிப்பிட்டி ருப்பதாகவும், இது நிஜ மதிப்பைவிட குறை வானதுன்னும் வக்கீல்கள் சைடில் சொல்றாங்க. அப்புறம் ஜெ.வுக்கும் சசிகலா, இளவரசி, சுதாகர னுக்கும் சம்பந்தமேயில்லைங்கிறதை கோர்ட் எப்படி நம்பும்னு கேட்கிற வக்கீல்கள், எல்லோருமே 36, போயஸ் கார்டன்ங்கிற அட்ரஸில்தானே இருந்திருக்காங்கன்னும் சொல் றாங்க.

""சரி.. இதெல்லாம் தீர்ப்பில் எதிரொலிக்குமா, அதைப் பற்றி என்ன சொல்றாங்க?''

""சட்டப்படி தப்பிக்க வாய்ப்பேயில்லைன்னு சொல்வதோடு, இத்தகைய குற்றங்களுக்கு 1 வருடத்திலிருந்து 7 வருடம் வரைக்கும் தண்டனை கிடைக்கும்னும், 3 வருடம் 1 நாளோ அல்லது அதற்கு மேலோ தண்டனை கொடுக்கப் பட்டால், கீழ்க்கோர்ட்டில் ஜாமீன் கிடைக்காதுன் னும், ஜெயிலுக்குப் போய்தான் மேல் கோர்ட்டில் பெயில் பெட்டிஷன் போடணும்னும் சொல்றாங்க. அதற்கு குறைவா தண்டனை கிடைச்சா, கீழ்க் கோர்ட்டிலேயே பெயில் கிடைச்சிடும். ஆனா, 1 வருசம் தண்டனைன்னாலும் முதல்வர் பதவியில் நீடிக்க முடியாதுன்னும் சொல்றாங்க.''

""இதெல்லாம் ஜெ. தரப்புக்குத் தெரியாதா? ஆனா அங்கே நம்பிக்கைதானே அதிகமா இருக்குது. அதனாலதானே இந்த கவுண்ட் டவுன் நேரத்திலும் மந்திரிசபையில் அதிரடி மாற்றம் நடந்திருக்குது!''

""அதெல்லாம் எங்க கட்சியில் சகஜம்னு சொல்ற அ.தி.மு.க நிர்வாகிகள், பெங்களூருவில் வாதாடிய குமார் உள்பட எந்த  வக்கீலையும் இறுதி வாதங்கள் முடிகிற வரைக்கும் ஜெ. நேரில் சந்திக்கலைன்னும், தீர்ப்பு தேதி சொன்ன பிறகுதான் அவங்களால சந்திக்க முடிஞ்சதுன் னும் சொல்றாங்க. இப்ப ராஜ்யசபா எம்.பி.யா இருக்கிற நவநீதகிருஷ்ணனுக்கு வேண்டியவரான  வக்கீல் ஒருவர்தான் கார்டனில் இருந்தபடி பெங்களூரு கேஸ் சம்பந்தப்பட்ட சகல வழிகளையும் கவனிச்சிக்கிட்டி ருக்காராம். சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட கம்பெனிகள் தொடர்பான கேஸில் நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெ தரப்பு ஒரு மனு தாக்கல் செய்திருக்குது. புதன்கிழமையன் னைக்கு அந்த கேஸ் விசாரணைக்கு வர்றப்ப, நீதிபதி அரவிந்த்குமார் சாதகமான தீர்ப்பைத் தருவாருன்னு நம்புறாங்களாம். அவர் கொடுக்கிற தீர்ப்பு மூலமா சொத்துக் குவிப்பு கேஸின் தீர்ப்புத் தேதியில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த முடியும்னும் ஜெ. தரப்பில் அசாத்தியமான நம்பிக்கை இருக்குது. அ.தி.மு.க. நிர் வாகிகள் பலரும் ஜெ. தப்பிச்சுக்கு வாரு. சசிகலா, இளவரசி, சுதாகரன் இவங்களுக்கு வேணும்னா தண்டனை கிடைக்கலாம்னு சொல் றாங்க. சட்ட நிபுணர்களோ இந்தக் கேஸே பொது ஊழியரான ஜெ. தன்னோட வருமானத்துக்கு அதி கமா சொத்து சேர்த்தாருங்கிறதுதான். அதனாலதான் அவர் முதல் ஆளா குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். விடுதலைன்னா எல்லோருக்கும்தான் விடுதலை கிடைக்கும். தண்டனைன்னா முதல் நபருக்கு நிச்சயம். மற்றவங்க மாட்டவும் செய்யலாம், தப்பிக்கவும் கூடும்னு சொல்றாங்க.''

""பெங்களூரு கேஸைப் போல இந்தியா முழுக்க கவனத்தை ஈர்த்த 2ஜி கேஸில் திடீர் திடீர் திருப்பங்கள் ஏற்படுதே?''

""ஆமாங்க தலைவரே.. .. இந்த கேஸில் குற்றம்சாட்டப்பட்டவரில் முதன்மையானவரான ஆ.ராசா, சுப்ரீம் கோர்ட்டுல போட்ட பெட்டிஷ னில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற கம்பெனிகளுக்கு அதற்கான மெரிட் இருக்குதுன்னு சி.பி.ஐ. டைரக்டர் தெரிவித்திருப்பதா பத்திரிகைகளில் செய்தி வந்தி ருக்குதுன்னும், அது சம்பந்தமான ஆவணங்களைத் தனக்குத் தரணும்னும் கேட்டிருக்காரு. அதாவது, கம்பெனிகளுக்குத் தகுதி இருக்குதுன்னு சி.பி.ஐ. சொல்லுதுன்னா, 2ஜி ஒதுக்கீடு பெற்றதுக்கு பிரதிபலனா கலைஞர் டி.வி.க்கு 200 கோடியை ஸ்வாம் டெலிகாமின் சகோதர நிறுவனங்கள் கொடுத்ததா சொல்ற வாதம் அடிபட்டுப்போயிடும். அந்தப் பணம், கடன்தொகைதான்னு நிரூபணமாகும். கேஸோட முக்கிய பாயிண்ட்டே இதுதான். அதுவே இப்ப ஆட்டம் காண்பதால, சம் பந்தப்பட்ட டாக்குமெண்ட்டு களை கேட்டு ராசா தாக்கல் செய்த பெட்டிஷனுக்கு பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினாரு. அடுத்த தலைமை நீதிபதியாகப்போகிற தத் தலைமை யிலான பெஞ்ச்தான் இதை விசா ரித்தது. சம்பந்தப்பட்ட டாக்கு மெண்ட்டுகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி இந்த பெஞ்ச் உத்தரவிட்டிருக்குது. இதனால் கீழ்க்கோர்ட்டில் விசா ரணை தடைபடும்னு வாதங்கள் வைக்கப்பட்டப்ப, கீழ்க்கோர்ட்டில் விசாரணையை நிறுத்தி வைப்ப தால உலகம் கீழே விழுந்திடாதுன்னு நீதிபதி சொல்லியிருக்காரு.''

""சி.பி.ஐ. டைரக்டர் ரஞ்சித்சின்ஹா ராஜினாமா செய்வாரு அல்லது அவரது பதவி பறிக்கப்படும்ங்கிற அளவுக்கு சர்ச்சைகள் பெரி சாகிக்கிட்டே இருக்குதே?''

""2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிற கம்பெனிகளோட நிர்வாகிகளை சி.பி.ஐ. டைரக்டர் சந்திச்சிருக்காருன்னும், அவர் வீட்டுக்கு வந்தவர்கள் சம்பந்தப்பட்ட வருகை பதிவேட்டில் இது நோட் பண்ணப்பட்டிருக்குன்னு சுப்ரீம்கோர்ட்டில் வக்கீல் பிரசாந்த் பூஷண் சொன்னதுதான் இந்த பரபரப் புக்கு காரணம். இந்த வழக்கு, 8ந் தேதியன்னைக்கு விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. டைரக்டர் வீட்டில் வருகைப்பதிவேடே கிடையாதுன்னு அவர் சைடில் வாதாடப்பட்டது. அங்குள்ளவங்க சொன்ன தகவலை மட்டும் வைத்து இப்படிக் குற்றஞ் சாட்டுவதா சொல்ல, அதை எழுத்துப்பூர்வமான பெட்டிஷனா தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்குது. பிரியங்காவும் ராகுலும்தான் ரஞ்சித்சின்ஹாவை சி.பி.ஐ. டைரக்டரா கொண்டுவந்தாங்க. இப்ப கோர்ட்டில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதால் அதைவச்சி அவரைப் பதவியிலிருந்து தூக்க, பா.ஜ.க. அரசு ஆலோசனை நடத்திக்கிட்டிருக்குது.''


""ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இடமாற்றம் சம்பந்தமாகவும் விவாதங்கள் ஓயலையே.. கோ-ஆப்டெக்ஸில் கைத்தறித்துறை மந்திரி கோகுலஇந்திரா ஒரு ரூம் கேட்டதற்கு சகாயம் மறுத்துட்டாருன்னும், அதுபோல ரீஜனல் மேனேஜர்களுக்கு சொந்தமா கார் தரணும்னு மந்திரி சொன்னதை பணம் வேஸ்ட்டுன்னு சகாயம் நிராகரிச்சிட்டாருன்னும், மந்திரி கலந்துகொண்ட கூட்டத்திலே சகாயம் தன்னோட மனைவியின் உடல்நலத்தைக் காரணம்காட்டி கலந்துக்கலைன் னும் இதெல்லாம்தான் அவரோட மாற்றத்துக்குக் காரணம்னும் ஏகப்பட்ட தகவல்கள் வருதே?''

""சகாயம் நேர்மையான அதிகாரின்னு எல்லோருக்கும் தெரியும். கள்ளக்குறிச்சியில கோ-ஆப்டெக்ஸ் அலுவலகம் இருந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் ஏலம் விட முயன்றதையும், அதில் நடந்த மோதலையும் நம்ம நக்கீரன் எழுதியிருந்ததே ஞாபகமிருக்குதா? அந்த விவகாரம் சம்பந்தமா  கள்ளக்குறிச்சி கோ-ஆப்டெக்ஸ் மேனேஜர் போலீஸில் புகார் கொடுக்க, சம்பந்தப் பட்டவங்க மேலே எஃப்.ஐ.ஆர் போடச்சொல்லி சகாயமே போலீஸைக் கூப்பிட்டுச் சொல்லியிருக் காரு. சம்பந்தப்பட்ட ஆட்கள் அ.தி.மு.க.காரங் கங்கிறதால கோ-ஆப்டெக்சுக்குப் பொறுப்பு வகிக்கிற கைத்தறித்துறை அமைச்சர் கோகுல இந்திரா வரைக்கும் இந்த விவகாரம் போயிருக்குது.''

""அமைச்சரோட ஆக்ஷன் என்ன?''

""இந்த விவகாரத்தை சமரசமா முடிச்சிட லாம்னு நினைச்சிருக்காங்க. அதனால அந்த மேனேஜரை சென்னைக்கு வரச்சொல்லி, அவர்கிட்டே தகராறு செய்து தள்ளி விட்டதா சொல்லப்படுற அ.தி.மு.ககாரரை மந்திரி ஓ.பி.எஸ். மூலமா மேனே ஜர்கிட்டே மன்னிப்பு கேட்க வச்சிருக்காங்க. மேனேஜரும், அவர் தள்ளினாரே தவிர, அடிக்கலைன்னு சொல்லி புகாரை வாபஸ் வாங்க சம்மதிச்சிருக்காரு. இது தெரிந்த சகாயம் ரொம்ப அப்செட் ஆயிட்டாரு. சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய மேட்ட ரில் இப்படி நேரில் கூப்பிட்டு சமரசம் பேசுவ தாங்கிறது அவரோட நிலைப்பாடு.''

""அமைச்சருக்கு கோ-ஆப்டெக்ஸில் ரூம் கேட்ட விவகாரம், ரீஜனல் மேனேஜர்களுக்கு கார் கொடுப்பது சம்பந்தமான பிரச்சினையிலே என்ன உண்மையாம்?''

""கைத்தறித்துறை செகரட்டரி ஹர்மந்தர்சிங் மூலமாத்தான் மந்திரி கோகுல இந்திராவுக்கு கோ-ஆப்டெக்ஸில் தனி ரூம் வேணும்னு சகாயத் துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்குது. இட வசதி இல்லைங்கிறதை சகாயம் ஓப்பனா சொல்லி யிருக்காரு. ஆனா மந்திரி தரப்போ, தனி அறை கொடுத்தா கட்சி ஆபீஸ் மாதிரி மாத்திடு வாங்கன்னு சகாயம் சொன்னதா இவங்களா ட்விஸ்ட் பண்ணி விட்டிருக்காங்க. பொங்கலுக்கு கொடுக்கிற இலவச வேட்டி- சேலையை விசைத்தறி நெசவாளர்கள்கிட்டேயிருந்து வாங்குறதுதான் சகாயத்தோட வழக்கம். அதனால பெரும் பாலான நெசவாளர்கள் பலன் பெறுவாங்க. இந்த முறை கதராடை நெய்கிற விசைத்தறி சங்கத்தைச் சேர்ந்தவங்க மந்திரி தரப்பை சந்திச்சி பேசியதால, இலவச வேட்டி-சேலை ஆர்டரில் 60% இந்தத் தரப்புக்குத்தான் ஒதுக்கணும்னு வலியுறுத்தப் பட்டிருக்குது. சகாயம் முடி யாதுன்னு சொன்னதால மந்திரி தரப்புக்கு  செம டென்ஷனாம்.''

""ஓ..''

""கோ-ஆப்டெக்ஸ் ரீஜ னல் மேனேஜர்களுக்கு ஜீப் தரணும்னு மந்திரித் தரப்பு கேட்டிருக்குது. கார் அல்ல. சகாயம் அதற்கு ஒப்புக் கொண்டதாகவும், ஜெ. முன்னிலையில் விழா நடத்தி பேரு வாங்க மந்திரி கோகுல இந்திரா ஆசைப்பட, சகாயம் ஒத்துழைக்கலைன்னு அமைச் சர் ஆட்கள் சொல்றாங்க. ஆனா, தீபாவளி சீசனைத்தவிர கோ-ஆப்டெக்ஸ் மேனே ஜர்களுக்கு வாகனத்தில் பறக்க வேண்டிய அவசியமில் லைன்னும் அதனால ஜீப்பில் பணத்தைக் கொட்டுவது தேவையில்லைன்னும் சகாயம் நினைப்பதா அவரது தரப்பு சொல்லுது. சகாயம் தங்களுக்கு சகாயமா இல்லைங்கிறதுதான் கோகுல இந்திரா தரப்போட கோபம். இதெல்லாம் தலைமைச் செயலாளர்கிட்டே புகாராகப் போக, அவர் ஒரு ரிப்போர்ட்டை ஜெ.வுக்கு அனுப்ப அதையடுத்துதான் கோ-ஆப்டெக்ஸிலிருந்து சகாயம் மாற்றப்பட்டாரு.''

""அதற்கப்புறம் நடந்ததை நான்  சொல்றேன். .. கோ-ஆப்டெக்ஸிலிருந்து சித்த மருத் துவத்துறைக்கு மாற்றப்பட்ட தகவல் சகாயத்துக்கு வந்தப்ப அவர்  தன்னோட மனைவியின் உடல்நிலையை கவனிப்பதற்காக விடுமுறையிலே இருந்திருக்காரு. இதெல்லாம் எதிர்பார்த்தது தான்னு சொன்ன சகாயம், அந்தத் துறையில் ஜாயிண்ட் பண்ணுறதுக்கு முன்னாடியே அங்கிருந்து அறிவியல் நகரத்துக்கு தூக்கியடிச் சிட்டாங்க. சித்த மருத்துவத்துறையில் சகாயம் அதிரடியா செயல்படுவாருன்னு அந்தத் துறை மந்திரிக்கு பதட்டமாம். அதனாலதான் யாருக்கும் தொந்தரவு இல்லாத அறிவியல் நகரத்தில் போஸ்டிங்காம். சகாயத்தை இரண்டு முறை மாற்றியதால அபூர்வா ஐ.ஏ.எஸ்.ஸுக்கும் இரண்டு டிரான்ஸ்பர் கொடுக்கப்பட்டது. இதனால ஐ.ஏ.எஸ். வட்டாரத்தில் செம டென்ஷன்.''

 ஆதரவாளர்களை நம்பவேண்டாம்!
-மருமகனை எச்சரித்த மாமா

அண்மையில் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அவரது தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சரும் காஞ்சி மா.செ.வுமான தா.மோ.அன்பரசன், "இன்னைக்கு கோபாலபுரத்தில் தலைவர் என்னைக் கடுமையா பேசிட்டாரு. இந்தளவுக்கு என் வாழ்க்கையில் மோசமான வார்த்தைகளை வாங்கிக் கட்டிக்கிட்டதில்லை' என சொல்லியிருக்கிறார். இதில் ஸ்டாலின் தரப்பு செம டென்ஷனாகியுள்ளது. செப்டம்பர் 5-ந் தேதி அன்பகத்தில் தி.மு.க இளைஞரணியின் மாநில-மாவட்ட- நகர நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது . அதில் பேசிய பலரும், "நரேந்திர மோடியை ஒரு வருசத்துக்கு முன்னாடியே பிரதமர் வேட்பாளரா பா.ஜ.க முன்னிறுத்தியதுபோல, உங்களை தி.மு.கவின் முதல்வர் வேட்பாளரா அதிகாரப்பூர்வமா அறிவிச்சி தேர்தல் வேலையை செய்ய ஆரம்பிக்கணும்' என்று சொல்லியுள்ளனர். மு.க.ஸ்டாலினோ, "அதெல்லாம் பேசவேண்டாம். முப்பெரும்விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்' என்று சொல்லி, அது தொடர்பான தீர்மானங்களையும் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றச் செய்தார்.

மு.க.ஸ்டாலினின் மாமாவான முரசொலி செல்வம், "மாவட்ட நிர்வாகத்தில் பழைய ஆட்கள் யாரும் வேண்டாம். எல்லோரையும் மாத்திட்டுப் புது நிர்வாகிகளைப் போட்டால்தான் கட்சி ஸ்ட்ராங்கா இருக்கும்' என்று ஸ்டாலினிடம் சொல்லியிருப்பதோடு, "ஆதரவாளர்கள்ங்கிறதுக்காக யாருக்கும் சப்போர்ட் பண்ணவேண்டாம். அவங்களை நம்பி கட்சி நிர்வாகத்தைக் கொடுத்தால் தேர்தல் முடிவுகள் சாதகமா அமையாது. கட்சிக்கு உண்மையா உழைக்கக் கூடிய சரியான ஆட்களைத் தேர்வு செய்யணும்' என்றும் எச்சரிக்கையோடு கூடிய ஆலோ சனையை சொல்லியிருக்கிறார்.

ad

ad