சனி, மே 02, 2015

பிரான்ஸ் மற்றும் சுவீடன் மேதின ஊர்வலத்தில், ஈழத்தில் நடக்கின்ற இன அழிப்புக்கு எதிராக போராட்டம்
சுவீடன் மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தன்று ஈழத்தில் நடக்கின்ற இனவழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
ஈழத்தில் இனவழிப்பை நிறுத்து, சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும், தமிழீழம் வேண்டும்,போன்ற பதாதைகளுடனும் தமிழீழ தேசியக்கொடியுடனும் தமிழ் மக்கள் வேற்றினத்தவர்களுடன் சேர்ந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன்,தங்களுடைய போராட்டம் குறித்து  பல்வேறு இன மக்களுக்கு தெளிவுபடுத்தினர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் என்றுமில்லாதவாறு தமிழின அழிப்பு எதிர்ப்பு போராட்டம் சுவீடன் மக்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது .
பிரான்சில் உணர்வுபூர்வமான நடைபெற்ற மேதினப்பேரணி
பிரான்சில் வாழும் ஈழத்தமிழர்கள், தமது நிலைப்பாட்டையும்,அவர்கள் இழந்த உறவுகளையும், தொடர்ந்துகொண்டிருக்கும் சிறீலங்கா அரசின் வன்கொடுமைகளையும் சர்வதேசத்தின் முன்வைத்து தமது மேதினப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.
நேற்று பிற்பகல் 2 மணிக்கு பிரானஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்த மேதினப்பேரணியானது, ஏனைய வெளிநாட்டவர்களையும் இணைத்துக்கொண்டு பாரிஸ் Republique பகுதியில் இருந்து ஆரம்பமாகியது.
மழைக்கு மத்தியிலும், பேரணி பாரிஸின் பிரதான சாலை வழியாகத் தொடர்ந்து நேசன் சுற்றுவட்டம் பகுதியைச் மாலை 6 மணியளவில் சென்றடைந்தது.