புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

2 மே, 2015

பசிலுடன் ஐந்து மணிநேரம் மந்திராலோசனை நடத்திய அத்துரலிய தேரர
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருக்கும் இடையில் ஐந்து மணித்தியாலங்களாக விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக நீதி அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் வார்டு தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
திவிநெகும நிதி மோசடி தொடர்பாக கொழும்பு நிதி மோசடி பிரிவினால் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு கடுவெல நீதிவான் முன் ஆஜர்படுத் தப்பட்டார். அவரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதன் பின் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக பசில் ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரும் பசில் ராஜபக்ஷவும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டது ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணியில் கம்பஹா மாவட்டத்திலாகும்.
இவ்வாறு ஒரே கட்சியில் ஒரே மாவட்டத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டாலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெவ்வேறாக செயற்பட்ட இவர்கள் இருவரும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துரையாடியது என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் ஆராயத் தொடங்கியுள்ளது.
ஐந்து மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
பசில் மற்றும் அதுரலிய தேரர் ஆகியோருக்கிடையில் ஐந்து மணித்தியால பேச்சுவார்த்தை
ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரர் அண்மையில் விளக்கமறியல் கைதியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது சுமார் 5 மணிநேரம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.நீதியமைச்சின் தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
ஊழல் குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்ட பசில் ராஜபக்ச கடுவல நீதிமன்ற உத்தரவின்பேரில் 14 நாட்கள் விளக்கமறியல் தண்டனையை அனுபவித்து வருகின்றார்.
எனினும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் தேசிய மருத்துவமனையின் கட்டணம் செலுத்தி சிகிச்சைப்பெறும் அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் பசில்,ரத்ன தேரர்ஆகியோரின் சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பிரதான காரணமாக இருந்தவர்..
இந்தநிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது ஜாதிக ஹெல உறுமய ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின்கீழ் போட்டியிடலாம் என்ற எதிர்வு கூறப்படுகிறது.
கம்பஹாவின் நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரரும்,பசில் ராஜபக்சவும் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு இடையிலான விரிசல்களை சரிசெய்யும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அத்துரலியே ரத்ன தேரர் இதுவரை பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்துக்களை வெளியிடவில்லை.
இதற்கிடையில் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் என்று போராடிய ரத்னதேரர் 19வது திருத்த வாக்களிப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.