புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2015

நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்: ஆண் குறிக்குள் குண்டுமணிகளை இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வெளியீடு, 2013 , இந்த ஆவணத்தில் இருந்து சில சிறிய பகுதிகளை இங்கே தருகிறோம்.
அதிர்வின் வாசகர்களுக்காக.
இந்த ஆவணத்தை வாசிப்பது என்பது மிகவும் மனச்சங்கடமானது. சேக்ஸ்பியரின் மக்பெத் நாடகத்தில் மக்பெத் “நான் அளவுக்கு அதிகமாகவே கொடூரங்களைத் தின்றவன்” என்று ஒரு குறியீடாகவே சொல்லுவான். இவ்வகை வாக்குமூலங்களை படிக்கின்ற போதும் அப்படித்தான் ஒன்றை விஞ்சியது மற்றொன்றாக அடுத்தடுத்துக் கொடூரங்களையே நாம் விழுங்கவேண்டியிருக்கின்றது. ஒருவரின் வாக்கு மூலம் இப்படி இருக்கின்றது: ”சிறிய உலோகக் குண்டுமணிகள் ஆண்குறியின் சலத் துவாரத்தினுள் செலுத்தப்பட்டன. [...]வெளிநாட்டிற்கு வந்த பின்னரே இந்தக் குண்டுமணிகள் அறுவை சிகிச்சை மூலம் வெளிநாட்டு மருத்துவர்களால் அகற்றப்பட்டன. (பக்கம்4)
யோகலிங்கம் விஜிதா என்ற 27 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் சித்திரவதை செய்யப்பட்டு கடினமான, கூம்புவடிவ வாழைப் பொத்திகள் பெண்குறிக்குள் திணிக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றாள். (பக்கம்19) 1997 ஆம் ஆண்டு மட்டக்களப்பைச் சேர்ந்த முருகேசபிள்ளை கோணேஸ்வரி என்பவர் பொலிஸாரால் அவரது வீட்டில் வைத்து கும்பலாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கொலைசெய்து அவரது பெண்குறியில் வெடிகுண்டை வெடிக்கவைத்து கும்பல் வன்புணர்வு செய்யப்பட்ட எல்லாவகைத் தடயங்களையும் அழித்துவிட்டனர். (pakkam 4)
“சுப்பிரமணியம் கண்ணன் என்ற வவுனியாவைச் சேர்ந்த […] நபரது மலவாசலூடாக முள்ளுக்கம்பி செலுத்தப்பட்டது” (பக். 21) மிகவும் கூரூரமானதும் மிக கொடூரமானதுமான இந்த நிகழ்வுகளின் விபரத்தை நான் இங்கே எடுத்துக்காட்டுவதற்கு வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் இவற்றை சர்வ உலகத்திற்கும் வெளிப்படுத்தி, அவர்களின் தார்மீக ஆதரவையும் அதன்மூலம் இவற்றுக்கு எதிராகச் ஏதாவது செய்யப்படவேண்டுமென்ற அவாவையும் பெறவேண்டுமானால் இவற்றைப் பகிரங்கமாக வெளியிட்டுத்தான் ஆகவேண்டும். அதுவே மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவினரின் (Human Rights Watch) இந்த அறிக்கையின் நோக்கமுமாகும். வாசிப்பதை நிறுத்தி, இந்த ஆவணத்தை மூடிவிட்டு, கண்ணில் படாமலும் மனதை உறுத்தாமலும் எங்கேயாவது தூர எறிந்துவிட வேண்டுமென்ற உணர்வு ஏற்படலாம் என்பதும் ஜதார்த்தமானதும், புரிந்துகொள்ளக்கூடியதும்தான்.
ஆனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்த மனித ஜீவிகள் தொடர்ந்தும் தங்களுக்கு நேர்ந்த பயங்கரங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சிகளுடனும் மனப்பலவீனங்களுடனும் எங்களுக்கு மத்தியில் வாழவேண்டுமே. இந்த ஆவணத்தை நாம் தூர வீசிவிட நினைப்பது போல் பாதிக்கபட்டவர்களும் தங்களுக்கு நேர்ந்த இரத்தமும் சதையுமாக அனுபவப்பட்ட இவ்வகைப் பயங்கரங்களை தூரவீசிவிட ஒருபோதும் முடியாது.
அருள்

ad

ad