புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

2 மே, 2015

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி இன்று வெள்ளிக்கிழமை பி.பகல் 4.30 மணியளவில் பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில் ஆரம்பமாகி பருத்தித்துறை நகரம், தும்பளை வீதி ஊடாக நடராஜா கலையரங்கை சென்றடைந்தது.
மேற்படி பேரணியில் பெரும் திரளான மக்கள் திரண்டு தமது ஆதரவை வழங்கி வந்துள்ளனர். தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் மே தினப் பொதுக்கூட்டம் காரைநகர் கணேச வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
கொடியேற்றல் நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிய பேரணி, ஈகைச்சுடர் ஏற்றல், அகவணக்கம், வரவேற்புரை வரையில் இடம்பெற்றுள்ளது. அடுத்து தலைமையுரை, அதிதிகள் உரைகளுடன் இறுதியாக இசைநிகழ்ச்சியுடன் நிறைவுபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரையாற்றினார்.