புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2015

ஜோன் கெரி இலங்கை வந்தடைந்தார் - விமான நிலையத்தில் கெரியை வரவேற்ற மங்கள
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜொன் கெரி சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்.
2005ம் ஆண்டின் பின்னர் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஒருவர் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ள ஜோன் கெரி, இலங்கை விஜயத்தின் பின்னர் ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
சற்று முன்னர் ஜோன் கெரி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தில் கெரியை வரவேற்ற மங்கள
அமெரிக்க இராஜாங்க செயலாளார் ஜோன் கெரி உட்பட குழுவினர் அமெரிக்காவுக்கு சொந்தமான போயிங் 757 என்ற விமானத்தின் மூலம் இன்று காலை 8 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதார்கள்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜோன் கெரியை விமான நிலையத்தில் வைத்து இலங்கையின் வெளியுறவுதுறை அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றுள்ளார்.
அவர் தமது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உட்பட அரசாங்க அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதேவேளை அவர் இன்று பிற்பகல் 2 மணியளவில் களனி விகாரைக்கு சென்று மத வழிபாடுகளில் கலந்துக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா இராஜாங்க செயலாளரினால் கொழும்பு புதிய அமெரிக்க தூதரக அலுவலகத்துக்கான அடிக்கல்லும் நாட்டப்படவுள்ளது.
அத்துடன் நாளை காலை 11 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டு செல்லவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad