சனி, மே 02, 2015


வார்னர் அதிரடி அரைசதம்.. துடுப்பெடுத்தாடுகிறது ஐதராபாத் 

ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 
நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணித்தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார். இதைத் தொடர்ந்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.
தொடக்க வீரர்களாக அணித்தலைவர் வார்னர், தவான் களமிறங்கினர். தவாம் கைகொடுக்க வார்னர் சென்னை அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார்.
இதனால் வார்னர் (61 ஓட்டங்கள்) 20 பந்துகளில் அரைசதம் கடந்தார். 
8 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 86 ஓட்டங்கள் எடுத்துள்ளது.