வெள்ளி, மே 06, 2016

ஐக்கிய நாடுகள் சபையை திருப்திபடுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட உள்ளது : முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் !!

ஐக்கிய நாடுகள் சபையை திருப்திபடுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட உள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விரைவில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் ரத்து செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை திருப்திபடுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும், எதிhவரும் ஜீலை மாதம் அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்களை ஒத்தி வைப்பது அரசாங்கத்தின் கொள்கையாக மாற்றமடைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையும் அபாயம் நிலவி வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு நீக்கிக் கொள்ளப்பட்டமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான இலக்கே மஹிந்த ராஜபக்ஸ என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருவதாகவும் பாராளுமன்றிலேயே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக அச்சுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.