புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 மே, 2016

30,000 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!

அமெரிக்க வைத்தியசாலைகளில் இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களை இணைத்துக் கொள்ளும், நிறுவனம் ஒன்றுடன் குறித்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி குறித்த ஒப்பந்தம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் எனவும், இதன்மூலம் 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.