புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 மே, 2016

150 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு: வைகோ


‘எங்கள் கூட்டணி 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்’ என்று ஆர்.கே.நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் வைகோ பேசினார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வசந்திதேவியை ஆதரித்து, கொருக்குப்பேட்டை அருகே கே.என்.எஸ்.டிப்போ அருகில் வைகோ வியாழக்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர், விதிமுறைகளை மீறி ஒப்புதல் வழங்கப்பட்டதால் தான் மவுலிவாக்கத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து 100 பேருக்கு மேல் இறந்தனர். இதுபோன்ற ஊழல்களை ஒழிப்பதற்காக நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர்கள் அடங்கிய பொது கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்படும். சாலை மற்றும் கட்டுமானங்கள் முறையற்றதாக கட்டப்படுவது தெரியவந்தால் உடனடியாக ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதுடன், தொடர்புடைய ஒப்பந்தக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதுடன், தவறுக்கு துணை போகும் அதிகாரிகள் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவார்கள். ஊழலையும் முற்றிலும் ஒழிக்க முடியும். இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.