புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 மே, 2016

வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது

பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு
திருப்பியனுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பிரான்சின் தலைநகரமான பாரிஸ் நகரிலேயே இந்த சம்பவம் சத்தமின்றி நடைபெற்று வருகின்றது.
முன்னர் வதிவிட உரிமை இல்லாத நபர் ஒருவரை பொலிசார் கைது செய்யும் போது அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு வழங்கப்படும் ,
ஆனால் தற்போது வதிவிட உரிமை ( விசா)  இல்லாமல் கைது செய்யப்படும் நபரை எந்தவொரு விசாரணையும் இன்றி பொலிசாரே நேரடியாக ரகசியமான முறையில் நாடு கடத்தி விடுகின்றனர்,