புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2016

கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் நீலங்களின் சமர் ஒரு முன்னோக்கிய பாய்ச்சல்

கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற நீலங்களின் சமர் துடுப்பாட்ட
போட்டியானது ஒரு முன்னோக்கிய பாய்ச்சலாகவே அமைந்து வருகிறது.
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கும், கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கும் இடையே வருடந்தோறும் இடம்பெறுகின்ற நீலங்களின் சமர் துடுப்பாட்ட போட்டி பாடசாலை மட்டங்களுக்கு அப்பால் சமூகத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்ற அளவுக்கு மாறி வருகிறது.
அதிலும் கடந்த வருடம் முதல் புலம்பெயர்ந்து வாழ்கின்ற இந்த இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்களும் இந்த துடுப்பாட்டம் தொடர்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
ஒரு சிலர் போட்டியை கண்டு கழிப்பதற்கு வருகை தரவுள்ளதாகவும் பாடசாலை தகவல்கள் தெரிவிக்கிறன. அந்தளவுக்கு கிளிநொச்சியின் நீலங்களின் சமர் முக்கியம் பெற்று வருவது எதிர்கால கிளிநொச்சியின் துடுப்பாட்டத்திற்கு ஒரு பலமே.
2008 ஆம் ஆண்டு முதல் கடினபந்து போட்டியாக மாற்றம் பெற்ற நீலங்களின் சமர் பின்னர் 2013 வரை நாட்டு சூழல் காரணமாக இடம்பெறவில்லை. மீண்டும் 2014 முதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு மெல்ல மெல்ல முன்னோக்கி நகர்ந்து தற்போது அனைவரினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றம் பெற்றிருக்கிறது.
இதுவரை ஆறு போட்டிகள் இடம்பெற்றிருக்கிறது அதில் இரண்டு போட்டிகளில் கிளிநொச்சி மத்திய கல்லூரியும், இரண்டு போட்டிகளில் கிளிநொச்சி இந்துக்கல்லூரியும், வெற்றி பெற்றுள்ளதோடு இரண்டு போட்டிகள் சமனிலையில் நிறைவுபெற்றிருக்கிறது.
இம்மாதம் 13,14 திகதிகளில் இடம்பெறவுள்ள இந்தப்போட்டி ஏழாவது போட்டியாகும். எனவே விறுவிறுப்பு மிக்க போட்டியாக இது மாறியிருக்கிறது. இந்தப்போட்டிகள் சிறப்பாக இடம்பெறுவதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக ஏயர்ரெல் தொலைதொடர்பு நிறுவனம் அமைந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் நிதி அணுசரனையே போட்டிகள் சிறப்புற இடம்பெறுவதற்கு பிரதான காரணமாகும்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற மிகப் பிரபல்யமான துடுப்பாட்ட போட்டியான வடக்கின் சமர்போன்று கிளிநொச்சியில் நீலங்களின் சமர் மாற்றம் பெற்று வருகிறது.
கிளிநொச்சியில் இந்தப்போட்டியானது துடுப்பாட்டத்தின் மீது இளைஞர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
அத்தோடு இரண்டு பாடசாலைகளுக்கும் இடையேயான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நட்புறவை மேலும் வலுப்படுத்துகிறது. அத்தோடு போட்டியாளர்களும் சரி, இரண்டு பாடசாலைகளினதும் மாணவர்களும் சரி இதுவரை நடந்த எந்த போட்டி நிகழ்வுகளிலும் வன்முறைகளில் ஈடுபட்டது கிடையாது. போட்டியாளர்கள் நடுவரின் எந்த தீர்ப்பையும் ஏற்று விளையாட்டுக்குரிய பண்புகளோடு நடந்துகொள்வதனையும், அவ்வாறே ரசிகர்களான மாணவர்களும் நாகரீகமாக மைதானங்களில் நடந்துகொள்வதனையும் ஒரு சிறப்பு அம்சமாகவே கூறமுடியும்.
எனவே நீலங்களின் சமர் கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் ஒரு முன்னோக்கிய பாய்ச்சலாகவே அமைகிறது. இது விளையாட்டை மட்டுமன்றி பரஸ்பர நல்லுறவையும், பண்புகளையும் வளர்கிறது. என்பதிலும் ஜயமில்லை. 2016 நீலங்களின் சமர் துடுப்பட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி
அதிபர் மு.இரவீந்திரனின் வழிகாட்டலில் கிரிசொன் தலைமையில் களமிறங்குகிறது.
அவ்வாறே கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி அதிபர் கி.விக்கினராஜாவின் வழிகாட்டலில் க.கஜனான் தலைமையில் களமிறங்குகிறது. மத்திய கல்லூரி அணியின் முகாமையாளராக ஆசிரியர் ஜோய் பியசீலனும், பயிற்றுவிப்பாளராக அஜித் அன்ரனியும் உள்ளனர் .
இந்துக் கல்லூரியின் அணியின் முகாமையாளராக ஆசிரியர் சிவலிங்கமும், பயிற்றுவிப்பாளராக சஞ்சயும் காணப்படுகின்றனர்.​

ad

ad