புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012


சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் போராளிகளின் வீட்டுக்கு இரவு நேரத்தில் செல்லும் படையினர்!- பீதியில் குடும்பத்தினர்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் விடுதலைப் புலிகளின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் செல்வதனால் அந்த பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அனைவர்க்கும் ஒரு அவசர வேண்டுகோள் :09248074010 (Toll Free)
இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐ.நா.வில் நவம்பர் 1ஆம் தேதி மறுபரிசீலனை நடைபெறுகின்றது. இதற்காக 5 லட்சம் கையெழுத்துக்களை (மிஸ்டு கால்) அனுப்புவதன் மூலம் போர்க் குற்றவாளிகளின் மேல் நடவடிக்கை எடுக்கும்படி இலங்கையை வற்புறுத்த இந்தியப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுப்போம். இந்த எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் தமிழராகிய நாம் இதைச் செய்ய முடியும். தயவு செய்து உடனே செய்யுங்கள்.

இதை செய்வதின் மூலமாக நாம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். 
குறிப்பு :ஒருவர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட Mobile (or)Land-line Numberல் இருந்து மிஸ்டு கால் கொடுக்கும்படி வேண்டுகிறேன் .

22 அக்., 2012

பு திய தலைமுறை தொலைகாட்சியில் இன்ற இரவு 17.30 மணிக்கு ஐ நா இல் இலங் கைக்கு எதிராக  புதிய பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் ஆரம்பம் பற்றிய நிகழ்ச்சி .காணத் தவறாதீர்கள் இந்த இணையத்திலும் காணலாம .புதியதலைமுறை.கொம் www .  puthiyathalaimurai  .com 


"மாவீரர் நாள் உரை' நிகழ்த்த வைகோ அடுத்த மாதம் லண்டன் பயணம்
புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின், பிறந்த நாளையொட்டி வரும் நவம்பர்  மாதம் லண்டனில் நடக்கவுள்ள விடுதலைப்புலிகள் ஆதரவாளர் கூட்டத்தில் பங்கேற்க ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ ‌செல்கிறார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதிக்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும், தன் பிறந்த நாளன்று, தொலைக்காட்சியில் தோன்றி,

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னப் பாலமுனை பகுதியில் இரு இராட்சத சுறாக்கள்  கடந்த வியாழக்கிழமை மீனவர்களிடம் சிக்கின.
கடலுக்குச் சென்றிருந்த ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்களின் வலையிலேயே இச் சுறாக்கள் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 02 சுறாக்களும் சுமார் 1000 கிலோகிராம் எடையுடையவை என்று கூறப்படுகிறது

இலங்கை ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ள ஆவணம் சட்டபூர்வமானது!- மொஹான் பீரிஸ்
இலங்கை தயாரித்த மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டு திட்டம் சட்டபூர்வமானதொரு எழுத்து ஆவணம் என முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள அவர், ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியின் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதி ஒருவரை ஏமாற்றிய இந்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கைது
இந்தியாவின் இராமநாதபுரத்திலுள்ள இலங்கை அகதி ஒருவரை வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கு விஸா பெற்றுத் தருவதாக கூறி, இராமநாதபுரத்திலுள்ள

வவுனியாவிலிருந்து கண்டிக்கு திருமண வைபவம் ஒன்றிற்கு சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!
கண்டி  பஸ் நிலையத்தில் இருந்து ஹட்டனுக்குச் செல்வதற்காக நள்ளிரவில் காத்திருந்த பயணி ஒருவரை ஆட்டோ ஒன்றில் அழைத்துச் சென்ற முடிச்சுமாறி ஒருவர் தேநீரில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, மயக்கி, உடைமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு அவரை வட்டவளைப் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளார்.

நல்லடக்கம் செய்யப்பட்டவர் இரண்டு வாரங்களின் பின்னர் வீடு திரும்பினார்?- களுத்துறையில் சம்பவம்
களுத்துறை பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நபர் ஒருவர் இரண்டு வாரங்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
களுத்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்த சடலமொன்றை தமது தந்தையின் சடலம் என பிள்ளைகள் அடையாளம் கண்டு, அதனைப் பொறுப்பேற்று இறுதிக் கிரியைகள் செய்துள்ளனர்.


நெட்டில் ஆபாச படம் பாடகி சின்மயி புகார் பேராசிரியர் கைது?

இன்டர்நெட்டில் ஆபாச படம் வெளியிட்டதாக பாடகி சின்மயி அளித்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் கைது செய்யபடுவார் என்று தெரிகிறது. ‘கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் மூலம் பிரபலமானவர் சின்மயி.
 தமிழ் தேசியக் கூட்டமைப்பு ௭ம்.பிக்கள் குழுவொன்று அடுத்த மாதம் தமிழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.   
தமிழகத்திலுள்ள இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களை மீள இலங்கைக்கு அழைத்து வருவது பற்றியும், அவர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஏனைய வசதிகள் குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்
13 ஆவது திருத்தத்தை நீக்கினால் மீண்டும் இன மோதல் வெடிக்கும்!
13 ஆவது திருத்தச் சட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம். இதனை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும் என்று கூறுவது முட்டாள்தனமாகும். அரசமைப்பில் திருத்தங்களை கொண்டுவர வேண்டுமாயின் புதிய திருத்தத்தை முன்வைக்க வேண்டும்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்

டென்மார்க் ஓபன்  பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால், 7ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஜூலியான் செங்கை சந்தித்தார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய சாய்னா 21-17, 21-8  என்ற கணக்கில் ஜூலியான் செங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
நடிகை ஜோதிகா 35 வயது  பிறந்த நாளை நட்சத்திர ஓட்டலில் 'கேக்' வெட்டி கொண்டாடினாசூர்யா மதுரையில் 'சிங்கம்-2' படப்பிடிப்பில் இருந்ததால் வரவில்லை
நடிகை ஜோதிகாவுக்கு 35 வயது ஆகிறது. தனது பிறந்த நாளை நட்சத்திர ஓட்டலில் 'கேக்' வெட்டி கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதில் நெருங்கிய தோழிகள் மற்றும் நடிகைகள் பங்கேற்றனர்.
ஆசிரிய தகுதி தேர்வுக்கான விடைகள் இன்று வெளியிடப்பட்டது. விடைகளை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
தமிழகம் முழுவதும் கடந்த 14-ம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. முதல் முறை நடந்த தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்தவர்கள், புதியவர்கள் என சுமார் 6.5 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்.
சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஆறுதல் வெற்றி
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணிக்கு நடந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ்
அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் . இதனையடுத்து சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை சீசன் முடிவடைந்து வட கிழக்கு பருவமழையும் தொடங்கி பெய்து வருகிறது.
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பாழடைந்த இரண்டு மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது.
சென்னையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பாழடைந்த இரண்டு மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது.
திருவல்லிக்கேணியில் கடந்த 4-ந்தேதி காலை சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 மாடி

ad

ad