புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2012


டிகர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி, ரசிகர்கள் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்கிறார்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் ஆர்.தங்கவேலு ஒரு அறிக்கை விடுத்து இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:–‘‘நற்பணி இயக்க தலைவர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, அவருடைய 58–வது பிறந்த நாளான

20 ஆயிரம் பேர் குவிந்தனர் : பரமக்குடியில் பெரும் பதட்டம்
பரமக்குடியில் 30ம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவத்தின் போது சிவக்குமார், மலைக்கண்ணன், வீரமணி ஆகியோர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு சில விரும்பத்தகாத செயல்களும் நடைபெற்றன. இதனை முன்னிட்டு அங்கு 144 தடை உத்தரவை போலீசார் பிறப்பித்துள்ளனர். 

நடிகை ஐஸ்வர்யாராய்க்கு பிரான்ஸ் நாட்டு விருது


டிகை ஐஸ்வர்யாராய்க்கு கலை சேவையை பாராட்டி பிரான்ஸ் நாட்டு சார்பில் மும்பையில் நடந்த அவரது பிறந்த நாள் விழாவில் விருது வழங்கப்பட்டது.

2 நவ., 2012


கொழும்பு புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள லொட்ஜ் ஒன்றின் குளியலறைக்குள் இருந்து 67 வயதான பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த சண்முகவேல் அம்பிகாவதி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

82 வயது தாயை அனாதையாக கட்டிலோடு
நடுரோட்டில் போட்டுவிட்டு போன மகன்கள்


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கண்டிகா கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கையா மனைவி சுப்பம்மா (வயது 82). இவருக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். ரங்கையா மரணம் அடைந்ததையொட்டி சுப்பம்மா தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் விரைவான அரசியல் தீர்வு! இந்தியா வலியுறுத்த
இக்கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளதாவது:
ஜெனிவாவில் நடந்து வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மறுஆய்வு கூட்டத்தில், இலங்கை தமிழர் பிரச்சினையில் விரைவான அரசியல் தீர்வு தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மீளாய்வு கூட்டத்தொடரில் சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்ப
பெலரஸ், வட கொரியா, ஈரான், துருக்கி, சீனா, கட்டார் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவான கருத்து வெளியிட்டுள்ளன.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக சில நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.

மீண்டுமொரு தடவை சர்வதேச அரங்கொன்றில் அம்பலப்பட்டு நிற்கும் இலங்கை அரசு
அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற சர்வதேச அரசியலின் முக்கிய விசையாகவுள்ள மேற்குலக நாடுகள், சிறிலங்காவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு இனியும் தாங்கள் தயாரில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிக்காட்டியுள்ளமை ஓருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு புகழ்மாலை சூட்டாது, இறுக்கமான நிலைப்பாட்டினை இந்தியா இம்முறை சபையில் வெளிப்படுத்தியுள்ளமை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. 

நஞ்சுக்கொடி அறுந்ததால் தாயும் குழந்தையும் மரணம்: துணுக்காயில் சம்பவம
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரை குழந்தையைப் பிரசவிப்பதற்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை நஞ்சுக்கொடி அறுந்தமையால் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர்- ஓயாத ஆரவாரமும் சர்ச்சையும்


சிவராத்திரியல்ல.. ஏகாதசியல்ல.. இரவு நேர கிரிக்கெட் போட்டியும் அல்ல.. ஆனாலும் அக்டோபர் 26 வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தின் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் கொட்டக் கொட்ட விழித்திருந்து அந்த டி.வி. நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார்கள். நேரடி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது சென்னை நேரு உள்விளையாட் டரங்கத்தில். அங்கும் பல்லாயிரக்கணக்கானோர் நள்ளிரவு கடந்தும் உற்சாகக் குரல் எழுப்பியபடியே இருந்தார்கள். அத்தனையும் விஜய் டி.வியின் ஜூனியர் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஏற்படுத்திய தாக்கம்தான்.
ஐ.நா.‌துணைப்பொதுச் செயலரிடம் டெசோ மாநாட்டு தீர்மான நகல்களை ஒப்படைத்தார் ஸ்டாலின் 
சென்னையில் கடந்த ஆக.12-ம் தேதி  தி.மு.க. சார்பில் கலைஞர் ‌த‌லைமையில் நடந்த டெசோ மாநாடு நடந்தது. இதில் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தீர்மான நகல்கள் ஐ.நா.பொதுச்செயலரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. 


வேண்டாய்யா வேட்டி! எடுய்யா பேண்டை! சட்டசபைக்கு ஸ்டைலாக வந்த எம்.எல்.ஏ., 

மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன், திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ தமிழழகன் ஆகியோர் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு தேமுதிக தலைமைக்கு அதிர்ச்சியை தந்தது. தொடர்ந்து மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.

தமிழர்களின் மறுவாழ்வு திட்டங்களுக்கு இலங்கை ஒப்புதல் : ஜெனீவா கூட்டத்தில் சமரசிங்கே

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், அப்போது நடந்த படுகொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி இலங்கை அதிபர் ராஜபக்சே விசாரணை நடத்த தவறியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.



           து, ஒருநாளில் நடந்த திடீர் நிகழ்வல்ல என்கிறது அ.தி.மு.க. மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வட்டாரம். விரிவாக விசாரித்தோம்.

1 நவ., 2012

பார்வைகள் குறும்பட வெளியிட்டு விழாவில் சிறந்த ஒளிபதிவிற்காக தீவகம் வேலணையைச் சேர்ந்த பிரியந்தன் (starmedia இன் இயக்குனர்) என்பவருக்கு வவுனியா வலயக்கல்வி பணிமனை விருது 
வடமாகாணத்தில் நடைபெற்ற மனநலதினத்தை முன்னிட்டு குறும்படபோட்டியில் வெற்றிபெற்ற  பார்வைகள் குறும்பட வெளியிட்டு விழாவில் சிறந்த ஒளிபதிவிற்காக

நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் , ஆலய திருப்பணி வேலைகள் ,யாவும் ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கின்றன
இத் திருப்பணி வேலைகளுக்காக ,புலம் பெயர்ந்து வாழும் எமது ஊர் உறவுகள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருவதாக அறிய முடிகின்றது .இப் பெரும் திருப்பணிக்கு தங்களால் வழங்குகின்ற பேருதவியை .முன்னிட்டு .அனைத்து உறவுகளுக்கும் .எமது அன்புகலந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் .. நன்றியுடன் . ஆலய அறங்காவலர்களும்


அனலைதீவு இந்து மயானம் புனரமைக்கப்பட்டுள்ளது.  22-7-2012 அன்று ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இப்பணிகளை அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா திறம்பட நடாத்தி முடித்திருக்கிறது. அத்துடன் ஊரின் வளர்ச்சிக்கு இவ் ஒன்றியம் மகத்தான சேவையை வழங்கிவருது குறிப்பிடத்தக்கது. (படங்கள் )

மண்டைதீவுப் பிரதேசத்திற்கு விரைவில் மின்சாரம் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மிகவும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  இப்பகுதிக்கு மின்சாரம்
விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக மின்கம்பங்கள் நடப்பெற்று மின்கம்பிகள்
பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றது.
 2013 ஆண்டு பங்குனி மாதம் மட்டில் குறிகட்டுவான் நயினாதீவுக்கான பாதை சேவை ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பாக்க படுகின்றது . நிர்மானபணிகள் .இரு இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கின்றது .

ad

ad