புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2012


20 ஆயிரம் பேர் குவிந்தனர் : பரமக்குடியில் பெரும் பதட்டம்
பரமக்குடியில் 30ம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவத்தின் போது சிவக்குமார், மலைக்கண்ணன், வீரமணி ஆகியோர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு சில விரும்பத்தகாத செயல்களும் நடைபெற்றன. இதனை முன்னிட்டு அங்கு 144 தடை உத்தரவை போலீசார் பிறப்பித்துள்ளனர். 


இந்த நிலையில், கொலை சம்பவத்தை கண்டித்தும், 3 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இன்று 'பந்த்' மற்றும் மவுன ஊர்வலம் நடத்தப்போவதாக முக்குலத்தோர் கூட்டமைப்பு அறிவித்தது. இதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.
இருப்பினும், திட்டமிட்டபடி மவுன ஊர்வலத்தை நடத்துவோம் என முக்குலத்தோர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். மேலும் இதில் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்கவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். பரமக்குடி வைகை நகர் பகுதியில் கூட்ட மேடையும் அமைக்கப்பட்டது. 
இதன் காரணமாக, பரமக்குடியில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். இரவோடு இரவாக கூட்ட மேடையும் அகற்றப்பட்டது. வைகை நகரில் உள்ள முக்குலத்தோர் கூட்டமைப்பின் நிர்வாகி வெள்ளைச்சாமி, ஒட்டப்பாலத்தில் உள்ள நிர்வாகி விஜயசாமி ஆகியோரை போலீசார் பேச்சு வார்த்தைக்காக காலையில் வீட்டில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
 பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களால் பரமக்குடியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
பஸ் நிலையம், ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசாரின் நடமாட்டமும் அதிகமாக இருந்தது. இதற்கிடையில் பரமக்குடி ஊர்வலத்தில் பங்கேற்க சுற்று வட்டார கிராமங்களான எமனேசுவரம், பெழிச்சாத்த நல்லூர், வேந்தோணி போன்ற பகுதிகளில் இருந்து பலரும் திரண்டு வந்தனர். அவர்களை ஆங்காங்கே போலீசார் தடுத்து நிறுத்தினர். 
ராமநாதபுரத்தில் இருந்து ஊர்வலத்தில் பங்கேற்க செல்பவர்களை தடுக்கும் வகையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இருசக்கர வாகனங்களில் செல்வோர், ஆட்டோவில் செல்வோர் மற்றும் நடந்து செல்பவர்கள் என அனைவரும் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், ராமேஸ்வரம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், இளையான்குடி, குமாரகுறிச்சி, சாலிகிராமம் உள்பட 700 கிராமங்களில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பரமக்குடியில் குவிந்தனர். அவர்கள் பரமக்குடி ஆற்றுபாலம் தேவர் மகாலில் குவிந்துள்ளனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு-பதட்டம் ஏற்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ad

ad