புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2013


யாழில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீட்டை கண்ணால் கண்டேன்! பிரான்ஸ் தூதுவர் வாக்குமூலம்
சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை எனது கண்களாலேயே நான் நேரடியாகக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபிசன் யாழ்.மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

யாழ் வடமராட்சிப் பகுதியில் இருந்து நேற்று கடல்தொழிலுக்குச் சென்ற ஆறு படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.இதில் மயிலிட்டித்துறையில் இருந்து 4 படகுகளும், பொலிகண்டித் துறையில் இருந்து சென்ற இரண்டு படகுகளுமே இவ்வாறு கரை திரும்பவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.பிந்திக் கிடைத்த தகவலின்படி குறித்த ஆறுபடகுகளில் 12 மீனவர்கள் உள்ளதாகவும், தற்போது இரண்டு படகுகள் கரையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரிசானாவிற்கு மரண தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது! இல.பாராளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி
இலங்கைப் பணிப் பெண் ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.  இச்செய்தியினை இலங்கை வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.

புலிகளுக்கு, கனடா பிராண வாயு கொடுத்து உயிர்ப்பிக்கிறதாம் ஜி.எல்.பீரிஸ் கவலைதெரிவிப்பு:


நந்திக்கடலில் போரிடும் திறனை இழந்து போன விடுதலைப் புலிகளுக்கு, கனடா பிராண வாயு கொடுத்து உயிர்ப்பிக்க முனைவதாக, முறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்கா அரசு மீது

தாழமுக்கம் வலுவிழந்தது: காற்றுடன் மழை தொடரும்

60 கி.மீ. வேகத்தில் காற்று, கடல் கொந்தளிப்பாக இருக்கும்; மட்டு உறுகாமத்தில் கூடுதல் மழை
இலங்கைக்கு அருகே 500 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு தென்கிழக்குப் பகுதியாக நகர்ந்து வங்காள விரிகுடாவில் செயலிழந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


வட மாகாணப் பாடசாலைகள் மோதும் கரப்பந்தாட்டத் தொடர்

வட மாகாண கல்வித் திணைக் களத்தினால் வட மாகாணப் பாடசாலை களுக்கு இடையேயான 16 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிக்கான விண்ணப்பங்களை வட மாகாண கல்வித் திணைக்களத்தின்

ஐ. சி. சி. தர வரிசை

துடுப்பாட்டத்தில் அம்லா; பந்து வீச்சில் அஜ்மல் முதலிடத்தில்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் முதல் இரு இடங்களையும் தென்னாபிரிக்க வீரர்கள் உள்ளனர். அதன் முழு விபரம் வருமாறு:-

விநெகும தமிழ் மக்கள் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்தும்

தமிழ் மக்களின் வாழ்வை தடுக்க முயல்கிறது தமிழ் கூட்டமைப்பு
வாழ்வின் எழுச்சித் திட்டம் தமிழ் மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். ஆனால் எமது மக்களின் வாழ்வில் எழுச்சி ஏற் படுவதை தடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது என ஈ. பி. டி. பி. தலைவர் அமை ச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


இராணுவத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதிகள் ஒருவார கால சுற்றுலா பயணமாக கொழும்பு வருகை தந்துள்ளனர். கொழும்பிலுள்ள இராணுவ மகளிர் படைப்பிரிவுக்கு சென்ற அவர்களை, இராணுவ தளபதியின் பாரியாரும் சேவா வனிதாவின் தலைவியு மான மஞ்சுளிகா ஜயசூரிய வரவேற்று உரையாடுகிறார். (ஷி)

'திவிநெகும' சபையில் நிறைவேற்றம்

  • 2/3 பெரும்பான்மை வாக்குகள்
  • ஆதரவு 160, எதிர் 53
மாகாண சபைகளுக்கும் அப்பால் சென்று மக்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம் - அமைச்சர் பசில்
‘திவிநெகும’ வாழ்வெழுச்சி சட்டமூலம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்

விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் 1994ம்  கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் வழக்கை எதிர்கொண்டு, தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய 19 வருடம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் நீண்ட காலம் கடும் சுகவீனமுற்று, முறையான சிகிச்சை இல்லாமல், நேற்று பரிதாபமாக மரணமடைந்த, 
பதுளை பூனாகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி என்ற 68 வயது மலையக வயோதிப தமிழ் பெண்ணின் பரிதாப மரணம், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கின்ற மலையக அரசியல் தலைமைகளின் கையாலாகாதனத்திற்கும், பொறுப்பின்மைக்கும்  அடையாளமாக அமைந்துவிட்டது. 
 இவர்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு உள்ளே இருந்துகொண்டு, அரசாங்க பதவி வரப்பிரசாதங்களை அனுபவிப்பதை வேறு தவிர என்னத்தான் செய்கிறார்கள் என, இவர்களை காணும் இடமெல்லாம்  தமிழ் மக்கள் கேள்வி எழுப்பவேண்டும்


வாத நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயாரின் உடல்நிலைக்கு மருத்துவம் பார்ப்பதற்காக தனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக 18 வயது பள்ளி மாணவி ஒருவர் இணையத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அந்த பகுதியையே அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது.
18-year-old Rebecca Bernardo, a high school student from Brazil

28,000 கோடியா? என வாயைப் பிளந்த மீடியாக்கள் அது ஸ்பெக்ட்ரம் பணம் என எந்தவித அரசியல் தொடர்புமில்லாத ராம      லிங்கத்தை வைத்து கதகளி ஆடின.
டந்த டிசம்பர் 31-ந்தேதி இரவு. இந்திய வருமானவரித் துறையினர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்புத்துறையில் உள்ள ஒருவரின் வீட்டுக்குள் புகுந்தபோது இந்தியா வே அதிர்ந்து போனது. அந்த வீட்டுக்காரரின் உரிமையாளர் பெயர் ராமலிங்கம்.
""ஹலோ தலைவரே... தி.மு.க.வில் எதிர் காலத்தில் பிரச்சினையாக மாறும்னு நினைச்ச சர்ச்சைக்கு ஜனவரி 6-ந் தேதி  கலைஞர் முற்றுப்புள்ளி வச்சிட்டாரே!''

""தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன்மொழி வேன்னு கலைஞர் பேட்டி கொடுத்ததைத்தானே சொல்றே.. முன்மொழிந்ததன் பின்னணியில் உள்ள தகவல்களைச் சொல்லுப்பா?''




               பாச சாமியார் நித்திக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறது "ஜெ.'’போலீஸ்.

மதுரை இளைய ஆதீனப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்த நித்தி, இழந்த தன் இமேஜை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தனது பிறந்தநாளை திருவண்ணா மலை ஆசிரமத்தில்(?) கோலாகலமாகக் கொண்டாட முடிவெடுத்தார். கூலிக்கு ஆள் பிடித்தாவது  கூட்டத்தைக் காட்டவேண்டும் என்பது அவரது திட்டம்
 நீலகிரி குன்னூலிருந்து 36 கிலோ மீட்டர் மலைத்தொலைவின் மேல் இருக்கிறது குந்தா தாலுக்காவிலிருக்கும் எடக்காடு. 11 மணிக்குள் நடையாய் நடந்து எல்லோரும் வந்து சேர்ந் திருக்க முதலமைச்சர் ஜெ. மதியம் 1.20 மணியளவில்தான் மேடைக்கு வருவார் என்பதால் எடக்காடு பெண்களைச் சந்தித் தோம். 

இங்குதான் தமிழக முதல்வர் ஜெ., கடந்த 4-01-13ந் தேதி உடலை வருடும் இதமான தென்றலுக்கும், வானத்தைத் தொடும் அளவு வளர்ந்திருக்கும் மரங்களுக்கும்,  காற்றோடு கலந்து வீசும் ரம்யமான யூகலிப்டஸின் நறுமணத்திற்கு மிடையே குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையின் 50-வது ஆண்டு விழாவில்... அத்தொழிற்சாலையின் கண்காட்சி யைத் திறந்து வைத்து பின் பொன்விழாவில் கலந்து கொள்கிறார் என்ற அறிவிப்பில் நீலகிரியே சின்னாபின்னமாக்கப்பட்டது.

ம.தி.மு.க.,வில் கொள்கை பரப்புச் செயலராக, பதவி வகித்தவர், நாஞ்சில் சம்பத். கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். கொள்கை பரப்பு துணைச் செயலராக, நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 2003ம் ஆண்டு, நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்டிருந்த, மூன்று அவதூறு வழக்குகளை, வாபஸ் பெற, சென்னை, செஷன்ஸ் கோர்ட்டுகளில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், சென்னை, வில்லிவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக தொடரப்பட்டிருந்த, அவதூறு வழக்கை வாபஸ் பெற, அனுமதி கோரி, தாக்கல் செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு பொறுப்பான, நீதிபதி மீனா சதீஷ் முன், விசாரணைக்கு வந்தது. வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், விடுதலை செய்வதாக, நீதிபதி மீனா சதீஷ் உத்தரவிட்டார்.

நம்மூரில் இதெல்லாம் சகஜமப்பா!
நீதியமைச்சர் நீதி கேட்டுப் போராட்டம்.
தலைமை நீதியரசர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை.
சனாதிபதியின் மகன் அதிக புள்ளி எடுத்து,சட்டக்கல்லூரியில் தேர்வு. 
சட்டக் கல்லுரி நுழைவில் இஸ்லாமிய மாணவர்களின் தீடீர் அதிகரிப்பு.
சட்ட நுணுக்கங்களின் ஆய்வு அற்று பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்கு புனர்வாழ்வு.
இதைவிட சட்டக்கல்லூரி வாசலே தெரியாத,அமைச்சர்  தேவானந்த  சொல்கிறார்:
"அரசியல் உரிமை முதற் கொண்டு,கற்பதற்கான சகல வசதிகளையும் வாதாடிப் பெற்றுத் தரத்தயாராக இருக்கிறேன்."
நம்மூரில் இதெல்லாம் சகஜமப்பா!
நீதியமைச்சர் நீதி கேட்டுப் போராட்டம்.
தலைமை நீதியரசர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை.
சனாதிபதியின் மகன் அதிக புள்ளி எடுத்து,சட்டக்கல்லூரியில் தேர்வு. 
சட்டக் கல்லுரி நுழைவில் இஸ்லாமிய மாணவர்களின் தீடீர் அதிகரிப்பு.
சட்ட நுணுக்கங்களின் ஆய்வு அற்று பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்கு புனர்வாழ்வு.
இதைவிட சட்டக்கல்லூரி வாசலே தெரியாத,அமைச்சர் தேவானந்த சொல்கிறார்:
"அரசியல் உரிமை முதற் கொண்டு,கற்பதற்கான சகல வசதிகளையும் வாதாடிப் பெற்றுத் தரத்தயாராக இருக்கிறேன்."
கூகுள் தளத்தில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தை எம் செம்மொழியான தமிழ் மொழி , தமிழ் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !!!...

நாம் கண்டிப்பா பார்த்து பகிர்ந்து கொள்ள வேண்டிய காணொளி .


எமது மண்ணின் கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவியை இனியாக இசை கோர்த்து பாடலாக்கி தருகிறார்  புங்கை பெற்ற மங்கை ப.ரோஹிணி 
பாராட்டுக்கள் .இங்கே அழுத்தவும் 
http://www.facebook.com/photo.php?v=10152404101645720&set=p.10152404101645720&type=2&theater

ad

ad