புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2013

திரும்பிப் பார்க்கிறேன் -எனது இணையதள பணியில் புங்குடுதீவு 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

அன்பான உறவுகளே ,
நான் எழுதும் இந்த மடல் அநேகமானவர்களுக்கு மகிழ்ச்சியையும் வியப்பையும் தந்தாலும் ஒரு  சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். இந்த மடலை எழுத தூண்டிய விசயமே கடந்த ஓரிரு தினங்களாக எமது இணையத்தை தடுத்தாளவோ அன்றி முற்றிலுமாக நிறுத்தவோ சில விசமிகள் அதி விசேச தாக்குதல் வழிகளை கையாள்வது கண்டுள்ளோம் .கடந்த யூலை 2012 இல் இப்படியான முயற்சி சுவிசில் இருந்து வந்தது. இந்த தடவை இந்தியாவில் இருந்து நடத்தபடுகிறது.நாம் பலமாக உள்ளோம்.எமது இணைய சேவை உலகிலேயே அதி சக்தி வாய்ந்த கூகுள்  உடனான ஒப்பந்த அடிப்படை முறையிலானது.ஆதலால் இந்த தாக்குதல்களை நாம் வெற்றி கொள்கிறோம் .ஊடக நாகரீகம் கருதி வேறு விபரங்களை தர விரும்பவில்லை இனி இந்த இணையம் பற்றிய அடிப்படை தகவல்களை உங்களோடு பரிமாற  உள்ளேன் .

ஆரம்பத்தில் இணைய அறிவு இல்லாத பொது வேறு ஒரு நாட்டில் இந்த இணை யத்தை ஆரம்பித்தோம்(www .pungudutivu .ch ) . அனால் அது நடைமுறை சாத்தியம் இல்லாத கஷ்டங்களை உண்டு பண்ணியதால் நானே சுயமாக முயன்று கற்றுக் கொண்டு இந்த புதிய இணையத்தை உருவாக்கினேன்(www .pungudutivuswiss .com ).இது எனது நீண்ட நாள் அவாவும் கூட. எனது பிறந்த ஊருக்காக சுமார் 120 வலைப்பதிவுகளை உருவாக்கி இந்த மாபெரும் இணையத்துடன் இணைத்துள்ளேன் .புங்குடுதீவு சுவிஸ் கொம் என்ற இந்த இணையம் எமது ஊரின் அமைப்பொன்றின் பெயரில் இயங்கினாலும் தன்னந்தனியாக  நான் மட்டுமே அத்தனை தயாரிப்புக்களையும் செய்து இயக்குகிறேன் .தனியே ஊருக்கான இணையமாக இல்லாது செய்தி சேவையையும் இணைத்து திறம்பட இயக்கியதன்  மூலம் தினமும் வாசகர்களை எம் இணையத்தை நோக்கி வரவழைப்பதில் வெற்றி கண்டுள்ளோம் .நான்கு வருடங்களை கடக்கும் இவ்வேளையில் தனியொருவனாக சுமார் 10 000 பக்கங்கள் அல்லது தொகுப்புக்களை இந்த இணையத்தில் மட்டும் இணைத்துள்ளேன்சுமார் 4300 நிழல்படங்களை தேடி எடுத்து கோர்த்துள்ளேன்  இதனை விட சிறிய கிராமங்கள் பாடசாலைகள் நிழல் படங்கள் மகிழ்வூட்டும் தளங்கள் ஆலயங்கள் சனசமூக நிலையங்கள் என தனித் தனியே சுமார் 120 இணையன்களாக  கொர்க்கபடுள்ளன.
ஒரு சில வருடங்களுக்கு முன்னே கூகுளே போன்ற தேடு தளங்களில் புங்குடுதீவு என்று தேடி பார்த்தால் சுமார் 10 படங்களும் சில செய்திகளும் மட்டுமே  வந்தன.எமது ஊர் ஒரு பெரிய கிராமம்.15 பாடசாலைகள் 20 பெரிய கோவில்கள் என நிறைந்த பெருமை கொண்டது.இதனை விட தனி ஒரு ஊரை சேர்ந்தவர்கள் என்று பகுப்பாய்வு செய்தால் புலம்பெயர் நாடுகளில் எம்மவர்களே முதல் இடத்தை பிடித்துள்ளார்கள்.அனால் எமது ஊருக்கான தகவல்கள் ஆவணங்கள் செய்திகள் படங்கள் என்பவற்றை கணணி வலை உலகத்துக்கு கொண்டுவருவதில் பின்னின்றோம் என்பதே உண்மை. இந்த மந்த நிலையை உடைத்தெறிந்து வரலாற்றை பதிவு செய்ய நான் எத்தனையோ இரவு பகலாக  உழைத்துள்ளேன் .இப்போதெல்லாம் நீங்கள் கூகுள்   இல் சென்று தேடினால் வருகின்ற அத்தனை படங்களும் எமது இணையத்தின் மூலம் உள்ளே வந்தவை என்பதனை யாரும் மறுக்க முடியாது. அண்மைக்காலமாக புது புது இணையங்கள் முக நூல் பதிவுகள் எல்லாம் எமது ஊரின் பெயரால் முளைத்துள்ளன. இருந்தாலும் எதிலுமே எதுவுமே  சொந்த முயற்சியினால் உருவாக்கபட்டவையாக இல்லை.எமது இணையத்தில் அல்லது எமது உழைப்பை உறிஞ்சி தமது முகவரியை தேடிக்  கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். பிரதி பண்ணுபவைக்கு நன்றி  மூலம் என்று கூட போடுவதே இல்லை  இறுதியாக எனது இந்த வெற்றிக்கு நான் எதிர்பா ர்த்தவர்களை விட எதிர்பாராதவர்களே ஆதரவும் ஊக்கமும் தந்துள்ளது புலனாகியது.உண்மையில் என்னோடு கற்றவர்களும் என்னிடம் கற்றவர்களும் உலகெங்கும் இருந்து என்னை பாராட்டி ஆதரித்தார்கள்.மறக்க முடியாதவை என் சிரம் தாழ்ந்த நன்றிகள் அவர்களுக்கு. நான் சமூக சேவையில் எத்தனையோ இடைஞ்சல்களை கண்டுள்ளேன் , முன் வைத்த காலை பின்வைக்க மாட்டேன் .என் புங்குடுதீவு மண் மேல் கொண்ட அன்பின் முன்னே எல்லாவற்றையும்   தவிடு பொடியாக்கி வென்றே செல்வேன் நன்றி
உங்கள் சிவ-சந்திரபாலன் சுவிட்சர்லாந்து . pungudutivu 1@gmail .com 



புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 10
ஆயுதப் போராட்டம் மெல்ல அடங்கி சமாதானச் சம்மதங்களில் அகிம்சையை ஈழம் பின்பற்றிய காலம். அன்றுதான் உயிருக்கும் உடலுக்கும் இடையேயான போரில் இருந்து மீண்டு, ஈழத்துக்குத் திரும்பினார் அன்டன் பாலசிங்கம். அவர் வந்து இறங்கிய இடம், இரணைமடு. அந்த இடத்தில் நான்

என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இராணுவப் புலனாய்வாளர்களின் திட்டமிட்ட நாடகம்: சிறீதரன் எம்.பி
கிளிநொச்சியில் எனது அலுவலகம் சோதனையிடப்பட்ட சம்பவமும், அதன் பின்னர் எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் இராணுவப் புலனாய்வாளர்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடகம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
உலக வழக்கத்திற்கு மாறாக அப்பாவி யுவதிகளின் குடும்ப வறுமையினை முன்னிறுத்தி ஏமாற்றி படையில் இணைத்துக் கொண்டமையினை கண்டித்தமைக்காக பழிவாங்கும் வகையிலேயே இந்த நாடகத்தை படையினர் அரங்கேற்றுகின்றனர்.

புதுமாத்தளனில் படையினர் பாதுகாப்பு வழங்க சிங்கள குடும்பங்கள் இன்று குடியேற்றம்
முல்லைத்தீவு மாவட்டம், புதுமாத்தளன் கடற்கரையியில் ஆயுதங்கள் சகிதம் படையினர் பாதுகாப்பு வழங்க இன்று காலை சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டு உள்ளன.

மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு? பெப்ரவரி 4-ல் டெசோ கூட்டத்தில் முடிவு! கருணாநிதி
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக டெசோ கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று திமுக தலைவர் முத்துவேலு கருணாநிதி கூறினார்.

30 ஜன., 2013


யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக்கோரி சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை! 100இற்கும் மேற்பட்டோர் கைது
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு கோரி, போர்க்குற்றம் மற்றும் இனப் படுகொலைக்கு எதிரான இளைஞர் இயக்கம் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் இன்று முற்றுகை இடப்பட்டது.
விஸ்வரூபம் தடை எதிர்த்து அரசு அப்பீல்: ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது
விஸ்வரூபம் படத்துக்கான தமிழக அரசின் தடையை நீக்கி, நேற்று இரவு 10 மணிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தலைமை நீதிபதி அடங்கிய முதல் பெஞ்ச்சில் இன்று


விஸ்வரூபம் படத்தில் காட்சியை நீக்க சம்மதம்! கமலஹாசன் அறிவிப்பு!
விஸ்வரூபம் படத்தில் குரான் சம்மந்தப்பட்ட காட்சியை நீக்க சம்மதம் எனவும், வேறு ஏதும் பிரச்சனைகள் ஏற்பட தாம் காரணமாக இருக்க விரும்பவில்லை என்றும் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுடன் பேசிய பின்னர் கமல் இந்த முடிவை அறிவித்தார். ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் சிலவற்றை நீக்குவதாகவும் தெரிவித்துள்ளார். 



          ""ஹலோ தலைவரே...… குடியரசு தின விழா, கொடி யேற்றம், அணிவகுப்பு, பரிசளிப்பு.''…

""வருடா வருடம் ஜனவரி 26-ந் தேதி நடப்பதுதானே...''

 ஒலித்த குரல்கள்!

கலைஞர்: கமலஹாசனின் "விஸ்வரூபம்' திரைப் படத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை மேலும் நீட்டிக்காமல் ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மூலமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசும் அதற்கு ஒத்துழைத்திட வேண்டும்.



         விவகாரம் நீண்டு கொண்டே இருக்கிறது, விஸ்வரூபம் என்ற வார்த்தையைப் போலவே.  படத்தை நீதிபதி பார்த்துவிட்டு தீர்ப்பளிப்பார் என்பதால் ஜனவரி 26-ந் தேதி சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மதியம் 3 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. 

விண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய ஈரான்!!


தெஹ்ரான்: அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி அணு சக்தி, செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. இந் நிலையில் உயிருள்ள குரங்கை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் அதை ப
 விஸ்வரூபம் தடை நாளை விஸ்வரூபம் திரையரங்கில் ஓட வாய்ப்பில்லை... தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தலைமை வழக்கறிஞர் தலைமை நீதிபதி பொறுப்பு தர்மராவ் இடம் அவரது வீட்டில் முறையிட்டார். தலைமை நீதிபதி காலை அவசர வழக்காக விசாரிப்பதாக உறுதி அளித்தார்.

மேலு
ம் இந்த தடை நீக்கம் ராஜகமல் பட நிறுவனத்திற்கு மட்டுமே பொறுந்தும். தியேட்டர்களுக்கு பொறுந்தாது. அனைத்து தியேட்டர்களுக்கும் உடனடியாக பாதுகாப்பு வழங்க முடியாது. எனவே படம் வெளிவராது என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

- நன்றி வழக்கறிஞர் இனியவன் 
விஸ்வரூபம் உருவான கதை கமல் சொல்கிறார் .பார்க்க வேண்டிய காட்சி 
விஸ்வரூபம் மீதான தடையை  நீக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்புஆனாலும் நாளை காலை மீண்டும் மேல் நீதிமன்றத்தில் தடை பெறப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது 


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடை நீக்கம்! திரையிட அனுமதி! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு!
 
 கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படத்துக்கு தமிழகம், புதுவையில் தடைவிதிக்கப்பட்டது. இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பதால் இரு மாநில அரசுகளும் இந்தநடவடிக்கையை எடுத்தது.

29 ஜன., 2013


விஸ்வரூபத்துக்கு நஷ்டம் ஏற்படுத்திய தமிழக அரசு ரூ.100 கோடி கோர்ட் டிப்பாசிட் செய்ய கோரிக்கைவிஸ்வரூபம் தீர்ப்பு தள்ளிப் போகிறது..இரவு 10 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி

தற்போது நடைபெறும் விஸ்வரூபம் விசாரணையில், கமல் தரப்பு வக்கீல், “விஸ்வரூபம் படத்தை தடைசெய்த காரணத்தால், திருட்டு வீடியோ வெளியாகி வசூல் பாதிக்கப்பட போகிறது. இதனால், படத்தை தடைசெய்த தமிழக அரசு இழப்பீடா

விஸ்வரூபம்’ படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இரவு 8 மணிக்கு தீர்ப்பு
விஸ்வரூபம்’ படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற
 ஐகோர்ட், மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
சென்னையில் ஏழை முதல் பணக்காரர்கள் வரை பொழுதுபோக்கிற்கான முக்கிய இடமாக மெரினா கடற்கரை உள்ளது. விடுமுறை நாட்களில் அங்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் மெரினாவில்

விஸ்வரூபம் சான்றிதழில் முறைகேடு! ஐகோர்ட்டில் தமிழக அரசு வக்கீல் வாதம்!

 கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் பட தடையை நீக்கக் கோரும் வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் துவங்கியது. ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன் வழக்கறிஞர்களிடம்விசாரணை மேற்கொண்டார்.

ad

ad