புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2013

விஸ்வரூபம்’ படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இரவு 8 மணிக்கு தீர்ப்பு
விஸ்வரூபம்’ படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற
நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டன. 

முதலில் தமிழக அரசு சட்டம் ஒழுங்கு கெடும் என்பதையே பிரதான வைத்து வாதாடியது. பின்னர், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. “விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது சட்டப்படியாக நடைபெறவில்லை. தணிக்கை சான்றிதழ் வழங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன” என்று சென்சார் போர்டு மீது தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

விசாரணை மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்தபோது, அரசுத் தரப்பு வாதம் வேறொரு பாதையில் சென்றது. கமல்ஹாசன் தனது ‘விஸ்வரூபம்’ படத்தை வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டதால், அவருக்கு வழக்குத் தொடரும் உரிமை இல்லை என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, ‘விஸ்வரூபம்’ படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். இந்த தீர்ப்பை உலகம் முழுவதும் உள்ள கமல்ஹாசன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வழக்கு பற்றி கமல்ஹாசனின் அண்ணனும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரருமான சந்திரஹாசன் கூறும்போது, தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில் மேல் முறையீடு செய்வோம். தீர்ப்பு எதுவாக இருந்தாலும் முதல்வர் ஜெயலலிதாவை அவர்கள் அனுமதித்தால் சந்தித்து பேசுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ad

ad