புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2013


புதுமாத்தளனில் படையினர் பாதுகாப்பு வழங்க சிங்கள குடும்பங்கள் இன்று குடியேற்றம்
முல்லைத்தீவு மாவட்டம், புதுமாத்தளன் கடற்கரையியில் ஆயுதங்கள் சகிதம் படையினர் பாதுகாப்பு வழங்க இன்று காலை சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டு உள்ளன.
அத்துடன் அக் குடும்பங்களுக்கு விசேட பாதுகாப்பும் படைத்தரப்பினால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி வரும் வரையிலும் அவர்கள் காத்திருக்கவேண்டிய தேவை இல்லாமல் போயுள்ளது.
இன்று காலை வழைமை போன்று இப்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் புதுமாத்தளன் மற்றும் இரணைப்பாலை மீனவர்கள் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் மேஜர் தர படை அதிகாரியொருவர் தலைமையில் படையினர் பாதுகாப்பு வழங்க நேற்றிரவு படைமுகாமில் பதுங்கியிருந்த சிங்கள மீனவர்கள் இன்று காலை அதிரடியாக குடியேற்றப்பட்டு உள்ளனர்.
தொழிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்த நிலையில் அங்கு திரண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட உள்ளுர் மக்கள் மிரட்டப்பட்டு கலைத்து விரட்டப்பட்டுள்ளனர்.
முன்னதாக எதிர்வரும் 3ம் திகதி முல்லைத்தீவிற்கு வருகை தரும் ஜனாதிபதி சகிதம் திரும்பி வரப்போவதாக கூறி திரும்பியிருந்தனர். எனினும் தம்மால் எடுத்து வரப்பட்ட படகுகள் மற்றும் பொருட்களை அப்பகுதிகளிலுள்ள படைமுகாம்களினில் வைத்து விட்டு அவர்களும் பதுங்கியிருந்தமை இன்றே ஏனைய மீனவர்களுக்கு தெரியவந்திருந்தது.
புது மாத்தளனுக்கு அருகாகவுள்ள இரணைப்பாலை கடல் வழி தொடர்பற்ற் பகுதியாகும். சுமார்  350ற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் அருகாகவுள்ள புது மாத்தளான் பகுதி கரைப்பகுதிகளிலேயே தொழில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த இப்பகுதி மக்கள தற்போதே மீள இயல்பு வாழ்விற்கு திரும்பி வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய புதுமாத்தளன் பகுதிகிளில் மிக அண்மையிலேயே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு சிங்கள மீனவர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே அருகாகவுள்ள கொக்கிளாய் பகுதி முற்று முழுதாக சிங்கள மீனவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

ad

ad