புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2013


மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு? பெப்ரவரி 4-ல் டெசோ கூட்டத்தில் முடிவு! கருணாநிதி
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக டெசோ கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று திமுக தலைவர் முத்துவேலு கருணாநிதி கூறினார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெசோ குழுவினர் டில்லி சென்று அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா உட்பட 6 நாட்டின் தூதர்களைச் சந்தித்து டெசோ மாநாட்டின் தீர்மானங்களைக் கொடுத்தனர்.
நேற்று புதன்கிழமை சென்னை திரும்பிய இந்தக் குழுவினர், அண்ணா அறிவாலயத்தில் அன்றிரவு டெசோ குழுவினரின் டில்லி பயணம் தொடர்பாக கருணாநிதியைச் சந்தித்து விளக்கினர்.
பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியது:-
தமிழ் மொழி, பண்பாடு இவற்றையெல்லாம் ஒழிப்பதற்கான முயற்சியில் இலங்கை அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இலங்கையில் 90 தமிழ் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியுள்ளனர்.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததற்கு ஈடான செயலாகவே இதனைக் கருதுகிறோம்.
எனவே எங்கள் எதிர்ப்புக் குரலைக் காட்ட ராஜபக்ச வரும்போது எங்கள் அணுகுமுறை எப்படி அமைய வேண்டும் என்பதை பெப்ரவரி 4ம் தேதி நடைபெறும் டெசோ கூட்டத்தில் முடிவு செய்வோம் என்றார் கருணாநிதி.
இதன்போது, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

ad

ad