""ஹலோ தலைவரே...… குடியரசு தின விழா, கொடி யேற்றம், அணிவகுப்பு, பரிசளிப்பு.''…
""வருடா வருடம் ஜனவரி 26-ந் தேதி நடப்பதுதானே...''
""ஆமாம்... இந்தமுறை எதிர்க்கட்சிகளுக்கு தலைமைச் செயலகத்திலிருந்து அழைப்பு அனுப் பப்பட்டது. ஆனா சி.பி.எம்., சி.பி.ஐ. உள்பட எந்தக் கட்சியும் ஆர்வம் காட்டலை. அவங்கவங்க கட்சி அலுவலகத்தில் பிஸியா இருந்துட்டாங்களாம். அமைச்சர்கள், அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் பங்கேற்ற குடியரசு தினமாக அமைய, ஜெ. முன்னிலையில் கவர்னர் கொடியேற்றி வைத்தார்.''
""விழா பற்றி அதிகாரிகள் என்ன சொல் றாங்க?''
""அவங்களுக்கு கிடைக்கிற பெருமையும் சந்தோஷமும் அணிவகுப்பில் கலந்துக்கிற அவங்க துறையைச் சேர்ந்த அலங்கார வாகனத்துக்குப் பரிசு கிடைக்கும்போதுதான். இந்த முறை, உள்ளாட்சித் துறை வாகனம்தான் அசத்தலா இருந்ததுன்னு அணிவகுப்பைப் பார்த்த பலரும் சொன்னாங்க. ஆனா, பரிசு கிடைத்தது காவல்துறை சார்பில் வந்த அலங்கார வாகனத்துக்குத்தான். கடந்த வருடமும் இப்படித்தான். ஏன்னா, அது ஜெ.வின் நேரடிப் பார்வையில் உள்ள துறை. போன ஆட்சியிலும் இப்படித்தான், துணை முதல்வரா இருந்த மு.க.ஸ்டாலின் பொறுப்பில் இருந்த உள்ளாட்சித்துறை வாகனத்துக்கே அவார்டு கொடுப்பாங்க. இதில்கூட பவர் பாலிடிக்ஸ் நடத்தினால், எப்படி உற்சாகமா செயல்பட முடியும்னு அதிகாரி கள் தரப்பில் குமுறல்கள் கேட்குது.''
""கோட்டையிலேயே குமுறல்னா, மற்ற இடங்களில் உள்ள அதிகாரிகள்கிட்டேயும் மக்கள்கிட்டேயும் உள்ள குமுறல்களை என்னன்னு சொல்றது?''
""தலைவரே... ... டீசல் விலை உயர்வில் இரட்டை அளவுகோல் இருப்பதையும் இதனால போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு அதிகச் செலவாவதையும் நாமதான் முதலில் சொன்னோம். நம்ம நக்கீரன்தான் அம்பலப்படுத்தியது. ரொம்ப காலமாகவே இப்படிப்பட்ட நடைமுறைதான் இருக்குன்னு பெட்ரோலியத் துறை அதிகாரிகள் சொல்றாங்க. இந்த இரட்டை அளவு கோலை கைவிடணும்னு கலைஞர் கோரிக்கை வச்சிருக்காரு. ஜெ.வோ, டீசல் விலை விவகாரம் தொடர்பா மத்திய அரசுக்கு எதிரா சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போடுவோம்னு அறிவிச்சிருக்காரு.''
""டீசல் விலை உயர்வுப் பிரச்சினை தீயா பரவ ஆரம்பிச்சிருக்கே…!''
""கர்நாடக அரசு தன்னோட பஸ்களுக்கு பிரை வேட் பங்க்கில் டீசல் போட அனுமதிச்சிடிச்சி. ஆனா, தமிழக அதிகாரிகள் இதுபற்றி கொடநாட்டில் ஜெ இருந்தப்பவே ஃபைலைக் கொண்டுபோயும் இப்ப சென்னைக்குத் திரும்பிய பிறகுதான் கர்நாடக பாணியில் டீசல் போட முடிவெடுக்கப்பட்டது. பங்க்குல அரசு பஸ்கள் நிற்பதால் வழக்கமா பெட்ரோல் போட வரும் கார் களும் டூவீலர்களும் சிரமப்படுது. இந்த சிரமத்தைக் கூட மக்கள் பொறுத்துக்குவாங்க. டீசல் விலை உயர்வைக் காட்டி பேருந்து கட்டணத்தை மறு படியும் உயர்த்தவும் ஆலோசனை நடக்குதாம். நேரடியா உயர்த்தாமல் சாதா பஸ்களை ஸ்பெஷல், பி.பி., எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்.னு போர்டு மாற்றி கலெக்ஷனை உயர்த்தினால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும்னு அதிகாரிகள் சொல்லியிருக் காங்களாம். அதனால, இன்னொரு சுமையைத் தாங்குவதற்கு தமிழக மக்கள் ரெடியாகணும்.''
""எவ்வளவு அடிச்சாலும் தாங்குற நல்லவய்ங் களாச்சே நம்ம மக்கள்!''
""தி.மு.க ஏரியாவுக்கு வர்றேங்க தலைவரே... தமிழைக் காப்பதற்காக இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் வருடந்தோறும் ஜனவரி 25-ந் தேதி தி.மு.க. சார்பிலும் அ.தி.மு.க. சார்பிலும் பொதுக்கூட்டம் நடக்கிறது வழக்கம். எப்பவுமே தி.மு.க. பொதுக்கூட்டம் பக்கம்தான் கவனம் அதிகமா திரும்பும். இந்த முறையும் அப்படித்தான். சென்னை திருவான்மியூரில் நடந்த கூட்டத்தில் கலைஞர் முன்னிலையில், மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி பேசிய பேச்சு எல் லோரையும் உணர்ச்சிமயமாக்கிடிச்சி. கலைஞரும் அவரைப் பாராட்டிப் பேசியதோடு, மொழி உணர் வை ஊட்டுகிற வகையில் உணர்ச்சிகரமா பேசினாரு. காஞ்சிபுரத்தில் பேராசிரியர், விருத்தாசலத்தில் ஸ்டாலின்னு தமிழகம் முழுக்கக் கூட்டம் நடந்தது.''
""மதுரையில் எப்படி?''
""மதுரை நிர்வாகிகள் எல்லோரும் கூட்டத்துல கலந்துக்கிட்டாங்களா?''
""தென் மண்டல அமைப்புச் செயலாள ரான அழகிரி வரலை. தன்னோட ஆதர வாளரா இருந்து இப்ப ஸ்டாலின் பக்கம் போய்விட்ட மாவட்டச் செயலாளர் தளபதி யை பதவியிலிருந்து மாற்றுகிற வரைக்கும் எந்தக் கூட்டத்திலும் கலந்துக்கிறதில்லைன்னு முடிவெடுத்திருக்காராம். ஜனவரி 30-ந் தேதி அழகிரியோட பிறந்தநாள் . அதற்கான ஏற் பாடுகளும் போஸ்டர்களும் 27-ந் தேதியே கலக்க ஆரம்பிச்சிடிச்சி. 62 பேர் கண்தானம் செஞ்சாங்க. அதில் அழகிரியின் மகன் துரை தயாநிதி கலந்துக்கிட்டாரு. இப்போதெல்லாம் கட்சிக்காரர்களோடு துரைதயாநிதியை அடிக்கடி பார்க்க முடியுதுன்னு உ.பி.க்கள் சொல்றாங்க. எம்.பி. தேர்தலில் மதுரை அல்லது தேனியில் களமிறங்கணும்ங்கிறது கணக்காம். மதுரையிலேயே பையனை இறக்கி விடுவதுங்கிற தீர்மானத்தோடு, வேலைகளைப் பார்க்கச் சொல்லியிருக்காராம் அழகிரி.''
""மு.க.அழகிரியோட பிறந்தநாளுக்காக போன ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு சென்னை முழுக்க அவர் படம் போட்ட போஸ்டர்கள் எக்கச்சக்கமா ஒட்டப்பட்டிருந்திச்சே.. கண்ணகி சிலம்பும் மனோகரனின் கைவிலங்கும் வீழ்ந்ததா? வீழ்த்தியதா?ன்னு கேட்டு ஒரு போஸ்டரு, இங்கே பரமசிவனும் இல்லை. நாங்கள் கருடனும் இல்லை. நடப்பது ராமநாடகமேன்னு ஒரு போஸ்டரு. இதைப் பார்த்த தி.மு.கவினரே யாரைச் சொல்றாங்க, என்ன சொல்றாங்க, ஒட்டுனதுன்னு யாருன்னு குழம்பிப் போய் நின்னாங்கப்பா..''
""கோபாலபுரத்துக்கும் இந்தத் தகவல் போயி ருக்கு.. போஸ்டரை ஃபோட்டோ எடுத்துட்டு வரச்சொல்லி பார்த்திருக்காரு கலைஞர். போஸ்டர் அடிச்சி ஒட்டுனது யாருன்னு அவர் நடத்துன விசாரணையில், அழகிரி சென்னைக்கு வந்தா வழக்கமா அவர் தங்குற தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவரை சந்திக்கும் நண்பர்தான்னும், பில்டரான அவர் பேரு ஜி.வெங்கடேசன்னும் தக வல் கிடைக்க, நண்பர்னா அழகிரிக்குத் தெரியாம லேயேவா போஸ்டர் ஒட்டியிருப்பாருன்னு கலைஞர் கேட்டிருக்காரு. அதோடு, பரமசிவன் என்பது கலைஞரையும், கருடன் என்பது அழகிரியையும் குறிப்பதோடு, நடப்பது ராம நாடகம் என்பது, ஸ்டாலினுக்கு பட்டாபி ஷேகம் நடக்குதுங்கிற அர்த்தத்தில் மறைமுகமா குறிப்பிட்டிருக்காங்கன்னும் கலைஞர் கோப மாயிட்டாராம். எம்.பி. தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், அழகிரி தரப்பு திட்டமிட்டு இப்படி செயல்படுவதால கட்சியோட வெற்றிதான் பாதிக்கும்னு நினைக்கும் கலைஞர், அழகிரி மேலே நடவடிக்கை எடுப்பதா, நேரில் கூப்பிட்டு எச்சரிப்பதான்னு ஆலோசனை பண்ணிக் கிட்டிருக்காராம்.''
""அழகிரி ஆதரவாளரான இசக்கி முத்துங்கிறவரும் ஏதோ அறிக்கை வெளியிட்டி ருக்காராமே?''
""ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இசக்கிமுத்துவை அப்புறம் அழகிரி சிபாரிசில் தான் மீண்டும் சேர்த்தாங்க. அவர்தான் அறிக்கை விட்டிருக்கிறார். ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன்னு கலைஞர் சொன்னதை மனசிலே வச்சிக்கிட்டு, தலைவர் பதவிக்கு யாரையும் முன்மொழிந்து தேர்ந்தெடுக்க முடி யாது. பொதுக்குழு கூட்டித்தான் தேர்ந் தெடுக்கணும்னு அறிக்கை விட்டிருக்கிறார். இசக்கிமுத்து மேலே அடுத்தகட்ட நடவடிக்கை பாயப்போகுதாம்.''
""புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையா மாற்றும் அரசாங்கத்தின் முடிவில் தலையிட முடியாதுன்னு ஹைகோர்ட் தீர்ப்பு கொடுத்த வேகத்தில், பொதுப்பணித்துறை ஆட் கள் வேலையை ஆரம்பிச்சிட்டாங்களாமே!''
""அது சம்பந்தமா நான் சொல்றேன்.. தி.மு.க தரப்பில் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனால், ஏற்கனவே மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கிடிச்சி. இதே நிலை நீடிக்கணும். ஸ்டே கொடுக்கக் கூடாதுன்னு வாதத்தை வைப்பதற்காகத்தான் அரசுத் தரப்பில் இவ்வளவு வேகமா வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனா, மருத்துவத்துறையைச் சேர்ந்தவங்களோ, கோர்ட் தீர்ப்பு கிடைத்தாலும் இதை மருத்துவமனையா மாற்றணும்னா நிறைய இடங்களை இடித்து மாற்றணும். லேட்டாகும். செலவாகும். ஆனாலும் சி.எம்.மின் ஈகோவால் 500 கோடி ரூபாய் வீணாகுதுன்னு சொல்றாங்க. தி.மு.க அடுத்த கட்டத்துக்குப் போகும்ங்கிறதால தான் அ.தி.மு.க அரசு வீம்பா வேலை பார்க்குது. ஆனா, தி.மு.க தரப்பில் இப்பதான் அடுத்த கட்டம் பற்றிய ஆலோசனைகளே ஆரம்பிச்சிருக்கு.''
படங்கள் : ஸ்டாலின் & அசோக்
லாஸ்ட் புல்லட்!
|