புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2013

விஸ்வரூபம் தடை எதிர்த்து அரசு அப்பீல்: ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது
விஸ்வரூபம் படத்துக்கான தமிழக அரசின் தடையை நீக்கி, நேற்று இரவு 10 மணிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தலைமை நீதிபதி அடங்கிய முதல் பெஞ்ச்சில் இன்று
காலை மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறும் தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நீதிபதி கே.வெங்கட்ராமன் இந்தக் கோரிக்கையை நிராகரித்தார். 

இதைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.நவநீதகிருஷ்ணன் தலைமையிலான வழக்கறிஞர்கள், நீதிபதி எலிபி தர்மாராவின் வீட்டிற்கு நேற்று இரவு 11 மணிக்குச் சென்று முறையிட்டனர். அவர்களிடம் பேசிய நீதிபதி, இன்று காலை 10.30 மணிக்கு முதல் பெஞ்ச்சில் இது தொடர்பாக முறையிடுமாறும், இந்த வழக்கை முதல் வழக்காக விசாரிப்பதாகவும் கூறினார். 

இதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள எலிபி தர்மாராவ் தலைமையிலான முதல் பெஞ்ச்சில் இதற்கான மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. அது பிற்பகலில் விசாரணைக்கு எடுத்து கொள்ளபடும் என்று நீதிபதி தெரிவித்தார். அதன்படி பிற்பகலில் விசாரணை தொடங்கியது. அரசு வக்கீல் நவநீதகிருஷ்ணன் வாதாடும் போது, 'விஸ்வரூபம் படத்தை திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனவே தொடர்ந்து தடை விதிக்க வேண்டும். என்றார். 

கமல் தரப்பு வக்கீல், 'தற்போது வேண்டும் என்றே விஸ்வரூபம் படத்திற்கு எதிராக வன்முறை தூண்டப்படுகிறது. எனவே தடையை நிரந்தரமாக ரத்து செய்து தகுந்த பாதுகாப்புடன் படத்தை திரையிட உத்தர விட வேண்டும்' என்று வாதாடினார். தொடர்ந்து வாதம் நடைபெறுகிறது.

ad

ad