புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2013


 ஒலித்த குரல்கள்!

கலைஞர்: கமலஹாசனின் "விஸ்வரூபம்' திரைப் படத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை மேலும் நீட்டிக்காமல் ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மூலமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசும் அதற்கு ஒத்துழைத்திட வேண்டும்.

ரஜினி: "விஸ்வரூபம்' தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்களை கமல் அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும்போது என் மனம் கலங்குகிறது. கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரிசெய்து படத்தை வெளியிட முஸ்லிம் சகோதரர்கள் உறுதுணையாக இருக்கணும்.

டாக்டர் ராமதாஸ்: சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் என்றால் அதை சமாளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இதற்காக தடை விதிப்பது முறையல்ல.

கி.வீரமணி: பிரச்சினையை ஒருவருக்கொருவர் பேசித் தீர்க்க வேண்டும்.

தொல்.திருமாவளவன்: மத்திய -மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு "விஸ்வரூபம்' பிரச்சினையில் சுமுக தீர்வு காண வேண்டும்.

பாலுமகேந்திரா: படத்தை சரியா? தப்பா?னு பார்த்து மக்கள்தான் தீர்மானிக்கணும். மத்தவங்க எப்படி தீர்மானிக்க முடியும்?

ஏ.எஸ்.பன்னீர்செல்வம் (மூத்த பத்திரிகை யாளர்): சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான படங்களை மக்களே ரிஜக்ட் பண்ணிடுவாங்க. சில வகையான கருத்துக்கள் கொண்ட படங்களை எடுக்கும்போது சில வகுப்பினரை சித்தரிப்பது தவிர்க்க இயலாத விஷயம். ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தைப் பற்றியதாகச் சொல்லப்படும் இந்தப் படத்தில் முஸ்லிம்களை காண்பிப்பதற்குப் பதிலாக புத்த மதத்தினரையோ, பார்சிகளையோவா காண்பிக்க முடியும்?

அருள்மொழி (சென்ஸார் போர்டு மெம்பர்): "துப்பாக்கி' படத்திற்கு எதிர்ப்பு கிளம் பியபோது அந்த ஹீரோ ஆட்சி மேலிடத்தை அணுகியதால் படம் பாதுகாப்பாக வெளிவந்தது. கமலும் போய் பார்த்தால் வெளியாகும் போல. "விஸ்வரூபம்' படத்துக்கு தடையை நீக்கக்கோரி தலைமைச் செயலாளருக்கு கையெழுத்து இட்டு புகார் கொடுக்க இருக்கோம்.

அ.முகமது அஸ்கர் உசேன் (சென்னை மாவட்ட செயலாளர் -இஸ்கப்):முஸ்லிம் மதமாக இருந்தாலும், வேறு மதமாக இருந்தாலும் அம்மதங்களின் மீது கட்டமைக்கப்படுகிற பயங்கரவாத, அடிப்படைவாத நடவடிக்கைகளை விமர்சிப்பதை மதங்களுக்கு எதிரான கருத்தாக ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே "விஸ்வரூபம்' படத்திற்கான தடையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

அஜயன்பாலா (எழுத்தாளர்): ஒரு படைப்பை முடக்குவது படைப் பாளியைப் பலவீனப்படுத்தும் செயல். அரசியல்வாதிகளை, போலீஸை, குறிப்பிட்ட பகுதி மக்களை வச்சு படமெடுக்காதேனு அவங்கள்லாம் போராடினா சினிமா தாங்குமா?

பிரகாஷ்ராஜ்: "விஸ்வரூபம்' தடைக்கு எதிராக ஒருமித்த கருத் துள்ளவர்களைத் திரட்டி கலந்தா லோசனைக் கூட்டம் நடத்தப் போவ தாக டுவிட்டரில் சொல்லியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க் சிஸ்ட் -மாநில செயலாளர்): "விஸ்வரூபம்' படத்தை திரையிட தமிழக அரசு தடைவிதித்திருப்பது சட்டரீதியாகவும், தார்மீக ரீதியாக வும் சரியல்ல.

பொன்.ராதாகிருஷ்ணன் (தலைவர் -தமிழக பி.ஜே.பி.): படத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தமிழர் களின் கருத்து சுதந்திரத்தை நிலை நாட்ட வேண்டும்.

பாரதிராஜா: தமிழ்த் திரையுலகிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கலைஞனை ஏதோ ஒரு சில காரணங்களுக்காக, அவனை காயப்படுத்தி அதில் வழியும் இரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்.

பார்த்திபன்: சென்ஸார் சார்பாக ஆறுபேர் எப்படி முடிவெடுப்பது? என மடக்குவாதம் செய்வதானால் 100 கோடி மக்கள் சார்பாக 100 பேர் முடக்குவாதம் செய்வதும் தீவிரவாதமே!

அமீர்: "விஸ்வரூபம்' பட சர்ச்சையில் நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் நானும் அந்தப் படத்தைப் பார்த்தபிறகு கருத்து சொல்லலாம் என்றிருக்கிறேன். திரைத்துறை சார்ந்த எவரேனும் தனிப்பட்ட முறையில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம்.

சரத்குமார் (தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அதன் தலைவர்): கமலையும், இஸ்லாமிய கூட்டமைப்பினரையும் அழைத்துப் பேசி முதல்வர் ஜெயலலிதா தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

ராதாரவி : இப்படி இருந்தா யார்தான் படம் எடுக்க முடியும்? இவ்வளவு பணத்தைப் போட்ட தயாரிப்பாளர் ரோட்டுக்கு வந்திட மாட்டாரா?

அஜீத்: நமது நாட்டில் ஜனநாயகமும், மதச்சார்பற்ற நிலையும் புரிந்து கொள்ளப் படாதது அல்ல. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. நமது நாடு சென்று கொண்டிருக்கும் நிலையையும், நாம் இருந்திருக்க வேண்டிய நிலையையும் நாம் கவனத்தோடு நினைத்துப் பார்க்க இதுவே சரியான தருணம்.

ad

ad