புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013

விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டு, முள்ளிவாய்க்கால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜோர்தான் கப்பல், தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்கப்பல் தற்போது இரும்புத் தேவைக்காக வெட்டப்பட்டு வருகின்றது.
விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை கப்பலை பார்க்கச் சென்ற பெருமளவான சுற்றுலாப் பயணிகள், முள்ளிவாய்க்கால் கப்பலடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வட மாகாணத் தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்: ஈழத் தமிழர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
இலங்கையில் இடம்பெறும் வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத்தமிழ் உறவுகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனிதஉரிமை ஆர்வலர்கள் மீதான அச்சுறுத்தல்! இன்றைய அமர்வில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தேவை: இலங்கை
மனித உரிமை பாதுகாவல்கள் மீது நடத்தப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை தரவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் நவி.பிள்ளை சந்தித்த மக்கள் மிரட்டப்பட்டமை தொடர்பில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கவனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் போது அவரை சந்தித்து பேசிய மக்கள் அச்சுறுத்தப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் பலர் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர்.
சரத் பொன்சேகாவை யாழ்ப்பாணத்துக்குள் வர விட்டது தவறு -ஊடகவியலாளர் மாநாட்டில் ஆனந்தி சசிதரன் 

9 செப்., 2013

அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் மறுப்பு
மக்கள் விவகாரம் மற்றும் மக்கள் தொடர்புகள் அமைச்சர் மேர்வின் சில்வா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதற்காக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சமர்ப்பித்திருந்த விசா விண்ணப்பத்தை தூதரகம் நிராகரித்துள்ளது.
தெரிவுக் குழுவில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலகல்
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலகியுள்ளது.
தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும்!- சுதர்சன நாச்சியப்பன் அதிரடி
தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் திடீரென இப்படி அதிரடியாக கூறியிருப்பது காங்கிரசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீமானை வாழ்த்தவந்த வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்: தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோவை ஏஐடியுசி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜெனீவாவில் இன்று மனித உரிமை மாநாடு : அறிக்கையை நவநீதம்பிள்ளை சமர்பிக்கிறார்.
ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 24-வது கூட்டம் இன்று ஜெனிவா நகரில் நடக்கிறது. இன்று துவங்கும் மாநாடு 27-ம் தேதி வரை நடக்கிறது.இக்கூட்டத்தில் 20 நாடுகளில் நடந்த
மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டியெழுப்பி வழிபட அனுமதிக்க முடியுமா?: கீதாஞ்சலிக்கு சரவணபவன் சவால்
சிங்கள அரசினால் தரை மட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டி எழுப்பி மக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்று கீதாஞ்சலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
மனிதஉரிமை ஆர்வலர்கள் மீதான அச்சுறுத்தல்! இன்றைய அமர்வில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொலைபேசியில் அறிமுகமான பெண்ணை சந்தித்த முதல் நாளே வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது
தொலைபேசியில் உரையாடி அறிமுகமான இளம் பெண்ணை சந்தித்த முதல் நாளே அந்த பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட கொழும்பு வாழ் தமிழர்களுக்கு அவசர அழைப்பு
தலைவர்-கே.வீ.தவராசா (தலைவர்.கொழும்பு கிளை.தமிழரசு கட்சி )
காலம்-(11-09-2013 ) புதன்கிழமை மாலை 05.30
இடம்-அக்சயா மண்டபம்,37 வது ஒழுங்கை .வெள்ளவத்தை .கொழும்பு 
சிறப்புரை-எம்.ஏ .சுமந்திர்டன் (பா.உ )

நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடைய தலைநகர் கொழும்பில் வசிக்கும் - வாக்காளர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கலந்துரையாடல் கொழும்புக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை 11ஆம் திகதி மாலை 5 மணிக்கு கொழும்புவெள்ளவத்தை 37வது ஒழுங்கையில் அமைந்துள்ள அக்‌ஷயா மண்டபத்தில் (செட்டிநாடு உணவக மண்டபத்தில்) நடைபெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ. சுமந்திரன் அவர்கள் பங்குபற்றி சிறப்புரையாற்றுவதுடன் விளக்கங்களையும் அளிக்கவுள்ளார்.

கொழும்பு வாழ் தமிழ் மக்களை இந் நிகழ்வில் தவறாது பங்குபற்றி ஆக்க பூர்வமான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

ad

ad