புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2013

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்: தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோவை ஏஐடியுசி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.


 அப்போது அவர்,  ‘’இந்தியாவில் 60 சதவீதம் எண்ணெய்யும், 20 சதவீதம் தங்கமும், 20 சதவீதம் சேவைப் பொருள்களும் இறக்குமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள 35 நிறுவனங்களை இந்திய முதலாளிகள் வாங்கியுள்ளனர்.
 இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்த அந்நிய நிறுவனங்கள் தாங்கள் ஈட்டிய லாபத்தை முதலீடு செய்யாமல் திரும்ப கொண்டுச் சென்றுவிட்டதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.
 நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி அளித்த 139 நிறுவனங்களில் 89 நிறுவனங்கள் போலி என தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை காணாமல் போனதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது போன்ற போலி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தால் நாட்டிற்கு ரூ.50 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதி செய்தும், நிலக்கரி இல்லாமல் உற்பத்தி பாதிக்கப்பட்டும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
 தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசுக்கு, இந்தியா நன்கொடையாக இரண்டு போர்க் கப்பல் வழங்கவுள்ளது. அவ்வாறு வழங்கினால் மீதமுள்ள தமிழர்களும் அழிப்பதற்கு தான் அவை பயன்படுத்தப்படும்.
 தமிழக முதல்வரை சந்தித்த மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என தெரிவித்துள்ளார்.  வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைக்கும் கட்சிகள் ஆட்சியை கைப்பற்றும்.
 தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், கர்நாடாக மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 50 ஆண்டுகளாக சட்டவிரோதமாக தாது நிறைந்த மணலை வெளிநாட்டு கடத்தி வந்துள்ளனர். இது துறைமுகம் வழியாக கப்பல் மூலமாக கடத்தப்பட்டுள்ளது. எனவே இதில் தொடர்புடையவர்களை கண்டறிய சி.பி.ஐ. முழுமையான விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

ad

ad