புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2013

தெரிவுக் குழுவில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலகல்
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலகியுள்ளது.
இனி வரும் காலங்களில் தமது கட்சி நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் கூட்டங்களில் பங்கேற்காது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
13வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணவும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு உரிய முறையில் செயற்படாத காரணத்தினால் ஜாதிக ஹெல உறுமய அதில் இருந்து விலகியுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய தெரிவுக்குழு நடத்திய பல கூட்டங்களில் கலந்து கொண்டது. தேர்தலுக்கு முன்னர் பொலிஸ் மற்றும் நிலம் சம்பந்தமான அதிகாரங்களில் மாற்றங்களை தெரிவுக்குழு முன்வைக்க போவதில்லை.
அத்துடன் தெரிவுக்குழுவினால் எதிர்பார்த்த பலனை பெறமுடியாது. அதேவேளை தெரிவுக்குழுவில் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் 13 வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கப்படும்.
அதேபோல் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாதத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய தொடர்ந்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றார்

ad

ad