புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

ஆபிரிக்க நாடுகளும் கைவிரித்து விட்டன-பீரிஸ் 
மனிதஉரிமைகள் விவகாரத்தில், அமெரிக்காவோ, பிரித்தானியாவோ சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சிறிலங்கா
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: முடிவெடுத்து விட்டது இந்தியா - இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 
வன்முறைகளுக்கு எந்தத் தருணத்திலும் இடங்கொடுக்காதீர்கள் ; முதலமைச்சர் வேண்டுகோள்

news
சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28ந் திகதிக்குக் கிட்டிய காலகட்டத்தில் கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு ஜெனிவாவிலும் கூறப்பட்டு வருகின்றன என இன்று மன்னாரில் நடைபெற்ற சாத்வீக போராட்டத்திற்கு முதலமைச்சர் அனுப்பிய  செய்தியில் தெரிவித்திருந்தார். 
இலங்கைக்கு எதிரான பிரேரணையை இம்முறையும் ஆதரிக்கிறது இந்தியா
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை இந்த முறையும் இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளிக்கும் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
யுவதிகளை  இராணுவத்திற்கு இணைத்தது போன்று  எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா
கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை  இராணுவத்திற்கு இணைத்தது போன்று  எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
தண்ணீர் அரசியல் சத்தமில்லாமல் முன்னெடுக்கப்படுகிறது; விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
news
குளிர்மையை ஏற்படுத்தவல்ல தண்ணீர் சமூகங்களுக்கிடையில் பகை நெருப்பை மூட்டக்கூடிய எரிபொருளாக அரசியல் ஆக்கப்படுகிறது. பற்றாக்குறைவான நீர்வளத்தைப் பங்கு போடுவதில் ஏற்படும் முரண்பாடுகள் தீராத பகையாக முற்றச் செய்யும் தண்ணீர் அரசியலாக சத்தமில்லாமல்
யாழ்ப்பாணத்துக்கும் பரவியது படைத்தரப்பின் கெடுபிடி
கடந்த சில நாள்களாக வன்னியில் நிலவிய இராணுவச்சோதனைகள் நேற்று முதல் யாழ்ப்பாணத்துக்கும் பரவின.நேற்றிரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறாக படையினரின்

ஜெனீவாவில் அனந்தி வெளியிட்ட கருத்துக்களுக்கு அமைச்சரவை அதிருப்தி

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலென விளக்கம்
இலங்கையின் உண்மையான நிலைமைக்குப் புறம்பான தகவல்களை முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் எழிலனின் மனைவியான அனந்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியிருப்பதாக, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிபந்தனைகளை ஏற்க முடியாது

விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு வரட்டும்
தமிழக மீனவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நிபந்தனையை ஏற்கமுடியாது. விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு வரட்டும். எமது நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம் என கடற்றொழில் நீரியல்
ஜெனிவாவை திசைதிருப்பவே அரசாங்கத்தின் புலி நாடகங்கள்: சீ.வி.விக்னேஸ்வரன்
வடமாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை ஜெனிவாவில் வரவழைக்கவே அரசாங்கத்தால் புலி நாடகங்கள் தற்போது காட்டப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
ஜெனிவாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஊடக மாநாடு

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்திலுள்ள பிரச்சினைகள் அல்லது தீர்வுகள் தொடர்பாக ஜெனிவாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஊடக மாநாடு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

இலங்கை–தென்ஆப்பிரிக்கா (குரூப்1)
இடம்: சிட்டகாங், நேரம்: மாலை 3 மணி
தரவரிசை
1 4


அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிக்சர் மழையுடன் சிலிர்க்க வைத்த நெதர்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் 19 சிக்சர்கள் அடித்து சிலிர்க்க வைத்த நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.
மூன்று அணிகள் தலைவிதி
இந்தியாவின் சுழல் பந்தில் தோற்றது பாகிஸ்தான் 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்–10 சுற்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தது.
சூப்பர்–10 சுற்று தொடக்கம்


இனவழிப்பு (GENOCIDE),இனச்சுத்திகரிப்பு (ETHNIC CLEANING),போர்க்குற்றம் (WAR CRIME) தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஜெனீவாவில் நடைபெற்றது.

ஐ.நா வில் கருத்து தெரிவித்த வைத்தியருக்கு இரகசிய பொலீஸ் அழைப்பாணை

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகளுக்கு தெளிவு படுத்தும்

தமிழகத்தில் பிரசாரத்துக்கு தலைவர்கள் படையெடுப்பு சோனியா-நரேந்திரமோடி வருகிறார்கள்

மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திறந்த வேனில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர்


தோல்வி பயத்தினால் வீராப்பு பேசும் சிதம்பரம், இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை: ஜெயலலிதா பேச்சு
சிவகங்கை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பேசிய ஜெயலலிதா, 
மத்தியில் உள்ள மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நாட்டை சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பல வங்கி கிளைகளை திறந்து வைத்துள்ளார். வங்கிகளை திறந்து வைப்பதால் மட்டும் ஒரு பகுதி வளர்ச்சி அடைந்துவிடாது. தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு
அதிமுக வேட்பாளருக்கு நகைச்சுவை நடிகர்கள் ஓட்டு வேட்டை!
நடிகர்கள் செந்தில், சிங்கமுத்து, சினிமா இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் போன்றோர் சிவகாசியில் விருதுநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனுக்காக வாக்கு வேட்டையாடினார்கள். 
அச்சுறுத்தலால் பொய் சொன்னேன்: வைத்தியர் டி.வரதராஜா
அச்சுறுத்தலால் பொய் சொன்னேன்: வைத்தியர் டி.வரதராஜா

D.Varatharajahஇலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வைத்தியசாலைகளின் மீது ஷெல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் சாதாரண மக்கள் காயமடைந்தது தொடர்பில் பொய்யான அறிக்கையை வெளியிட்டதாகவும் தமிழீழ விடுதலைப்புலி இயக்கத்தினர் எவ்விதமான அச்சுறுத்தல்களையும் விடுக்கவில்லை எனவும் முல்லைத்தீவில் சேவையாற்றிய வைத்தியர் டி.வரதராஜா தெரிவித்துள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகம் ஜெனீவாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, அனுபவத்தை தெரிவித்ததன் பின்னர் பி.பி.சி. சிங்கள செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவருடைய சகோதர வைத்தியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற்கொண்டு, பி.பி.சி.யுடனான நேர்காணலை டாக்டர் வரதராஜா நிராகரித்துவிட்டார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை, நான்காவது மாடியில் தடுத்து வைத்திருந்த காலத்தில், பொய் கூறுமாறு அரசாங்கம் தனக்கு அழுத்தம் கொடுத்தது என்றும் அவர் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இரகசிய பொலிஸ் முன்னிலையில் மீண்டும் ஆஜராகுமாறு வீட்டுக்கு கடிதம் வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், உங்களால் வருகை தர முடியாது விடின் உங்களுடைய தங்கையை பொலிஸுக்கு அனுப்பி வைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் டாக்டர் வரதராஜா கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் வடக்கில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் வரையிலும் யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அரச வைத்தியர்கள் பலரில் டாக்டர்  டி.வரதராஜாவும் ஒருவராவார். அவர் உள்ளிட்ட வைத்தியர்கள் ஐந்து பேர், அந்த நாட்களில் யுத்த களம் தொடர்பில் பி.பி.சி சிங்கள சேவை உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு தொடர்;ச்சியாக தகவல்களை வெளியிட்டனர்.

யுத்தத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி ஐந்து வைத்தியர்களும், பல மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டதுடன் 2009ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது புலிகளின் அச்சுறுத்தலினால் யுத்த களம் தொடர்பில் கருத்துகளை தெரிவித்ததாக கூறினர். அதற்கு பின்னர் அவர்கள் அனைவருக்கும் ஓமந்தையில் சேவையாற்றுவதற்கு அரசாங்க அனுமதி கிடைத்தது.

யுத்த காலத்தில் தான் எவ்விதமான மிகைப்படுத்தல் செய்திகளையும் வழங்கவில்லை என்றும் தான் அக்காலப்பகுதியில் தான் கூறியவை உண்மையானவை என்றும் தான் வழங்கிய செய்திகள் உண்மை என்பதை அங்கிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்களிடம் வருவர். ஆனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கூறுமாறு புலிகள் எங்களிடம் கூறவில்லை என்றும் டாக்டர் வரதராஜா கூறியுள்ளார்.

விசேடமாக நாங்கள் சேவையாற்றிய தற்காலிக வைத்தியசாலைகள் பலவற்றின் மீது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறியுள்ள வரதராஜா, யுத்தத்தின் இறுதி மூன்று மாதத்திற்குள் செஞ்சிலுவை சங்கத்தினால் படுகாயமடைந்த 9,000 பேர், முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களிலிருந்து திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டமையையும் நினைவு கூர்ந்தார்.

யுத்த வலயத்தில் 3 இலட்சம் மக்கள் சிக்கியிருந்த வேளையில் அங்கு 80 ஆயிரம் பேர் மாத்திரமே எஞ்சி இருந்தனர் என்று அரசாங்கம் தெரிவித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

மருந்துகள்,சாப்பாடு உள்ளிட்ட சகலதையும் 80 ஆயிரமு; பேருக்கும் போதுமான அளவு கொடுத்தோம் என்று அரசாங்கம் கூறியிருந்தது. எனினும் மயக்கமடைய செய்யும் மருந்து இல்லை, இரத்தம் கொடுக்கவில்லை, அதனால் பெரிய பெரிய காயங்கள் ஏற்பட்டவர்கள் மருந்துகள் இன்றி, சிகிச்சை இல்லாமல் மரணமடைந்தனர் என்றும் வைத்தியர் தெரிவித்தார்.

எனினும் யுத்த காலத்தில் வைத்தியர்களால் முன்வைக்கப்பட்ட அறிக்கை உண்மையானது அல்ல என்று இலங்கை அரசாங்கம் அடிக்கொருதடவை கூறிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வைத்தியசாலைகளின் மீது ஷெல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் சாதாரண மக்கள் காயமடைந்தது தொடர்பில் பொய்யான அறிக்கையை

ad

ad