புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

ஆபிரிக்க நாடுகளும் கைவிரித்து விட்டன-பீரிஸ் 
மனிதஉரிமைகள் விவகாரத்தில், அமெரிக்காவோ, பிரித்தானியாவோ சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சிறிலங்கா
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

“அமெரிக்கா அல்லது பிரித்தானியா போன்ற நாடுகளால் தனித்தோ, அல்லது ஐரோப்பிய ஒன்றியம் மூலமாகவோ சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும். 

ஆனால் அதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. 

எந்தவொரு தனிப்பட்ட நாடும் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையால், பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது. 
 
அதற்குரிய அதிகாரங்கள் பாதுகாப்புச்சபைக்கு மட்டுமே உள்ளது. 

பாதுகாப்புச் சபையில் அத்தகைய தீர்மானம் கொண்டு வரப்பட்டால், சீனாவும் ரஷ்யாவும், அதனை வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்து விடும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானத்தை நிறைவேற்றினாலும் கூட, சிறிலங்கா அதனை ஏற்றுக்கொள்ளாது. 

தீர்மானத்தின் தற்போதைய வரைவு, சிறிலங்காவின் இறையாண்மைக்கு சவாலானது, என்பதால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. 

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஏற்கனவே, தீர்மானங்களை எடுத்து விட்டு நடைமுறைப்படுத்தும் ஒருவர். 

அவர் எப்போது, சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணையை கோரி வந்துள்ளார். 

அவரது பிந்திய அறிக்கை பக்கசார்பானது என்பதால் அதை நிராகரித்துள்ளோம். 

அனைத்துலக விசாரணையை ஏற்கவோ, நாட்டின் இறையாண்மை விடயத்தில் சமரசம் செய்து கொள்ளவோ, முடியாது. 

அது நாட்டின் அடிப்படை சட்டங்களுக்கு முரணானது. 

ஐரோராப்பிய ஒன்றியம், பிரசெல்சில் எடுக்கப்படும் முடிவுக்கு கட்டுப்படுகிறது. 

அதிலுள்ள 17 நாடுகளும் அந்த முடிவுக்காகவே ஐரோப்பிய நாடாளுமன்றத்திலாயினும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலாயினும் வாக்களிக்கின்றன. 

இது சிறிலங்காவுக்கு பாதகமான விடயம். 

ஏனென்றால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வாக்களிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே தீர்மானித்து விட்டது. 

சிறிலங்கா மீதான இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று, பல சிறிய நாடுகள் ஜெனிவாவில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது கூறின. 

ஆனாலும் அவர்களால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு உதவமுடியவில்லை. 

ஏனென்றால் அவை, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் பாதுகாப்பு, பொருளாதார விடயங்களில் தங்கியுள்ளன. 

பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகளின் மூலம், ஆபிரிக்காவிலுள்ள சிறிய நாடுகளை அமெரிக்காவும், மேற்கு நாடுகளும், தமது தமது செயற்கைக்கோள் மாநிலங்கள் போல வைத்திருக்கின்றன. 

அவற்றின் நிலைமையை புரிந்து கொள்ளமுடிகிறது. 

ஆனாலும் மனச்சாட்சிக்கு விரோதமாக அவர்கள் வாக்களிக்க கூடாது. 

ஐ.நாவோ, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையோ பக்கச்சார்பாக செயற்படக் கூடாது. 

ஒரு பக்கசார்பாகவோ, தமக்கு சார்பானவர்களின் பக்கத்தில் நின்றோ முடிவெடுக்கக் கூடாது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad