புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

வன்முறைகளுக்கு எந்தத் தருணத்திலும் இடங்கொடுக்காதீர்கள் ; முதலமைச்சர் வேண்டுகோள்

news
சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28ந் திகதிக்குக் கிட்டிய காலகட்டத்தில் கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு ஜெனிவாவிலும் கூறப்பட்டு வருகின்றன என இன்று மன்னாரில் நடைபெற்ற சாத்வீக போராட்டத்திற்கு முதலமைச்சர் அனுப்பிய  செய்தியில் தெரிவித்திருந்தார். 

எப்படியாவது வடமாகாணத்தில் நிலைமை சீரடையவில்லை என்ற தோற்றத்தை வரவழைக்கவே இந்த நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்பதே தமிழ் மக்கள் அனைவரின் ஏகோபித்த முடிவு. எனவே கட்சி அடிப்படையில் அன்றி நாங்கள் வருங்காலம் எமக்கு மேலும் இடர் தருவதாக அமையாது நல்லவிதமாக அமைய வேண்டும் என்றே நாங்கள் இந்த அடையாள விரதத்தையும், பிரார்த்தனையையும் நடத்துகின்றோம்.

ஆனால் எனதருமை மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். வன்முறைகளுக்கு எந்தத் தருணத்திலும் இடங்கொடுக்காதீர்கள். எங்கள் அகிம்சை முறையே எமது ஆயுதம்.

எமது பிரார்த்தனையே எமது கேடயம். இவற்றின் உதவியுடன் எம்மை உறுத்தப் பார்க்கும் சகலரையுந் தர்மத்தின் பக்கம் சாய வைப்போம்.

எமது இன்றைய ஒன்று கூடல் எம் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வைத்தரும் நிகழ்வாக அமையட்டும். நாங்கள் எந்த விதத்திலும் அரசாங்க எதிர்ப்பில் ஈடுபடவில்லை. ஆனால் இங்கு போர்க்கால முடிவில் நடைபெற்றவை சம்பந்தமான ஆய்வு நடைபெற இடமளிக்கப்படவில்லை.

நடப்பவை சம்பந்தமாக அரசாங்கம் ஆற அமரச் சிந்தித்துப் பார்க்கவில்லை; அத்துடன் எதேச்சாதிகாரமாக இங்கு நடக்கப் போகின்றவற்றிற்கு இன்று இடப்படும் அடித்தளத்தை ஆராய எமக்கு அனுசரணைகள் வழங்கப்படவில்லை. எனவே அடுத்த நாடுகளுக்குச் சொல்லி அழவேண்டிய ஒரு சந்தர்ப்பத்தை எமக்கு அரசாங்கமே எடுத்துத் தந்துள்ளது. இதற்காக எம்மைக் குற்றங் கூறுவதில் பயனில்லை என தெரிவித்திருந்தார்.

ad

ad