புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

ஜெனிவாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஊடக மாநாடு

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்திலுள்ள பிரச்சினைகள் அல்லது தீர்வுகள் தொடர்பாக ஜெனிவாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஊடக மாநாடு
ஐ.நாவின் தீர்வு விடயத்தில் தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் செயற்பாடு பிரதானம் எஸ்.கஜேந்திரன்
வெளியிடப்பட்ட திட்ட வரைபு தமிழ் மக்களின் விடயத்தில் திருப்தி காணவில்லை இதில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்து பிரதானமானது என செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
ஐ.நா சபையில் வரவுள்ள தீர்மானத்தை வலிமையுள்ளதாக்குவதில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்பு மிக மிக பிரதானம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் லங்காசிறி வானொலியின் ஜெனிவாக் கலையகத்தில் தெரிவித்தார்.
மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணைக்கான ஆரம்ப கட்டத்தை தயார்படுத்த முடியும்: சட்டத்தரணி குருபரன்
அமெரிக்காவின் திட்டவரைபு முழுமையான சர்வதேச விசாரணையை நோக்கியதென்று கூற முடியாது என சட்டத்தரணியும் விரிவுரையாளருமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை எந்தத் தரப்பினரையும் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்ல தகைமையற்றது. குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தகைமை சர்வதேவ நிதுிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. அதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என ஜெனிவாவில் லங்காசிறிக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ad

ad