புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

ஜெனீவாவில் அனந்தி வெளியிட்ட கருத்துக்களுக்கு அமைச்சரவை அதிருப்தி

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலென விளக்கம்
இலங்கையின் உண்மையான நிலைமைக்குப் புறம்பான தகவல்களை முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் எழிலனின் மனைவியான அனந்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியிருப்பதாக, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளார்.
அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்து விளக்கமளித்த அமைச்சர், எல்.ரி.ரி.ஈக்கு சிறுவர் போராளிகளை இணைப்பதற்கு ஒத்துழைப்பாகவிருந்த அனந்தி, ஜெனீவா சென்று இலங்கையின் உண்மை நிலைக்குப் புறம்பான தகவல்களையும், வடமாகாணம் தொடர்பான பொய்யான தகவல்களையும் வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கம் மீது அவர் போலியான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார். இரண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திலேயே அவர் இவ்வாறான பொய்யான தகவல்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்குக் கூறியுள்ளார்.
அனந்தியின் கருத்தானது அரசாங்கம் மீதுள்ள நன்பெயரைக் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதுடன், சர்வதேச சமூகத்திடம் அனுதாபம் பெறும் வகையில் அமைந்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் தமது அதிருப்தியை வெளி யிட்டதுடன், இலங்கையின் உண்மை நிலைமைக்குப் புறம்பாக முன்னெடு க்கப்படும் பிரசாரங்களை முறியடித்து உண்மை நிலைமையை தூதரகங்கள் ஊடாக விளக்குவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

ad

ad