புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2019

மைத்திரி, ரணில், மஹிந்த மூவருக்கும் உடன்பாடுஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அவர்களுக்குள் உடன்பாடு எட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது?

ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லும் என்று மு.கா செயலாளர் நாயகம் எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கான பாரிய குடிநீர் திட்டம்


யாழ்ப்பாணத்தில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பாரிய குடிநீர் செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றுக்காலை வடமராட்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

ஐதேகவினரின் வாயை அடைத்த ரணில்


ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும்வரை அதுகுறித்த பிரசாரங்களை செய்ய வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற

ஸ்ரீ லங்கா பொதுஜன கூட்டணி ' இரு வாரத்திற்கு பிறகு உதயமாகும்

பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து ' ஸ்ரீ லங்கா பொதுஜன கூட்டணி ' என்ற பெயரில் உத்தேச ஜனாதிபதி தேர்தலுட்பட இடம் பெறவுள்ள தேர்தல்களில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்

பருத்தித்துறையில் ஆயுதங்கள் மீட்பு

பருத்தித்துறை பகுதியல் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல் துறையினர் தெரிவித்தனர்.

குப்புற வீழ்ந்த மீனவ சம்மேளனம்?

வடக்கிற்கான மைத்திரியின் விஜயத்தின் போது எதிர்த்து போராடப்போவதாக சொன்ன வடமராட்சி வடக்கு மீனவ சம்மேளனப்பிரதிநிதிகள் கடைசியிவ் அவரை வரவேற்று நினைவுப்பரிசில் பிடித்துக்கொண்டு புகைப்படமும் பிடித்துக்கொண்ட பரிதாபமும் நடந்தது.

லண்டனில் ஒப்பந்தம் போட்ட எடப்பாடி


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக அரச அலுவலாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் பயணமாக நேற்று புறப்பட்ட அவர் முதலில் பிரித்தானிய தலைநகர் லண்டன் சென்றுள்ளார்.

ஹாங்காங்கில் முப்படைகளுடன் புகுந்தது சீனா!



சீனாவுடன் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தததையடுத்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஹாங்காங்கில் தொடர்ந்து நிர்வாக நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில்

கட்டளை முறையை மாற்ற முனைகிறார் ஜனாதிபதி ஈ.சரவணபவன்

படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கும் விவகாரத்தில் இராணுவமே இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கூறுகின்றார். ஜனாதிபதிக்கு நிறைவேற்றதிகாரம் இருக்கிறது. அவர் இராணுவத்திற்குக் கட்டளையிடலாமே தவிர, இராணுவம் ஜனாதிபதிக்குக்

2000 ஏக்கர் காணி விரைவில் விடுவிப்பு

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள சுமார் 2000 - 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு எதிர்வரும் ஓரிரு மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் குடும்பம் ஒன்றை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கையை, அந்தநாட்டு நீதிமன்றம் நடுவானில் தடுத்து நிறுத்தியுள்ளது.

நடுவானில் தடுக்கப்பட்ட நாடு கடத்தல்
இலங்கை தமிழ் குடும்பம் ஒன்றை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கையை, அந்தநாட்டு நீதிமன்றம் நடுவானில் தடுத்து நிறுத்தியுள்ளது. நடேஸ் - பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும்

29 ஆக., 2019

ப.சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய தடை நீடிப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே, சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்

முக்கிய இருவர் மஹிந்தவின் பக்கம் பாய்ந்தனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

விடுதலை கோரிய நளினியின் மனுத் தள்ளுபடி

இந்தியாவில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை விடுவிக்க கோரி அரசிடம் நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை கொச்சைப் படுத்தும் சிங்கள நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்கள்

விடுதலைப்போராட்டத்தின் தூய்மையை களங்கப்படுத்தும் விதமான புத்தகங்கள் வடதமிழீழத்தின் சிறிலங்காவிற்கான ஆளுனர் சுரேன் ராகவனால் ஒழுங்குபடுத்தப்பட்ட புத்தகண்காட்சியில் இடம்பெற்றிருப்பது தமிழீழமக்களிடையே எதிர்ப்பலைகளை உண்டாக்கி இருக்கிறது.

குண்டுதாரியின் உடலை அகற்ற தீர்மானம்

மட்டக்களப்பு - கள்ளியங்காடு மயானத்தில், புதைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரியின் எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என மட்டக்களப்பு மாநகர சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கில் காணிகள் விடுவிப்பை துரிதப்படுத்த உத்தரவு

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில்- வடக்கில் விடுவிக்கக் கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில்-

28 ஆக., 2019

வைத்தியர் சிவரூபனிற்கு சித்திரவதை?

வைத்திய அதிகாரி சிவரூபனுக்கு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு, அவரது குடும்பத்தினரால், நேற்று (27)

அனுமதியின்றி பயங்கரவாதியின் தலை புதைப்பு- மாநகர சபை சாடல்

மட்டக்களப்பு- சீயோன் தேவாலய தற்கொலைக் குண்டுதாரியான பயங்கரவாதி எம்.அசாத்தின் உடற்பாகங்களை புதைப்பதற்கு எந்தவித அனுமதியையும் மட்டக்களப்பு மாநகர சபை வழங்கவில்லை என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மைத்திரி - மஹிந்தவுக்கிடையில் முக்கிய சந்திப்பு

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இரவு கூட்டணி அமைப்பது தொடர்பில் முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

ad

ad