புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

29 ஆக., 2019

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை கொச்சைப் படுத்தும் சிங்கள நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்கள்

விடுதலைப்போராட்டத்தின் தூய்மையை களங்கப்படுத்தும் விதமான புத்தகங்கள் வடதமிழீழத்தின் சிறிலங்காவிற்கான ஆளுனர் சுரேன் ராகவனால் ஒழுங்குபடுத்தப்பட்ட புத்தகண்காட்சியில் இடம்பெற்றிருப்பது தமிழீழமக்களிடையே எதிர்ப்பலைகளை உண்டாக்கி இருக்கிறது.

சுரேன் ராகவன் அவர்கள் சிறீலங்கா பேரினவாத அரசின் ஒரு கைக்கூலியாக செயற்பட்டுவருவது யாவரும் அறிந்த விடயம் அந்த நிலையில் தமிழீழத்தில் இருக்கின்ற இளையோர் மீது தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்பாகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாகவும் தவறான எண்ணக்கருக்களை விதைப்பதற்கா இவ்வாறான விசமத்தனமான செயல்களில் சுரேன் ராகவன் களமிறங்கி இருக்கின்றார் என்பது தெளிவாக தெரிகின்றது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வரலாறும் புனிதமும் தமிழன் என்கின்ற இனமிருக்கும் வரை இருக்கும் என்பது யாவரும் அறிந்தது.

111

ஆனால் எதிரியானவன் அதை சிதைப்பதற்காக பல்வேறு விசம் பிரச்சாரங்களையும் இது போன்ற வரலாற்று திரிபுகளையும் எம்மீது திணிக்க முயற்சிக்கின்றான்.

ஆகவே நாம் அனைவரும் எமது வரலாற்றை எமது போராட்டத்தை எமது அடுத்த சந்ததிக்கு சரியான வழிமுறையில் கொண்டு சேர்க்க வேண்டியது எமது கடமையாகும்.