31 ஆக., 2019

பருத்தித்துறையில் ஆயுதங்கள் மீட்பு

பருத்தித்துறை பகுதியல் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல் துறையினர் தெரிவித்தனர்.

யுத்தத்தின் போது மறைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஆயுதங்களே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த கால யுத்தத்திற்கு முன்பான காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கிளைமோர் குண்டு , மோட்டார் ரவைகள் மற்றும் பலவகையான ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது