புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2019

ஸ்ரீ லங்கா பொதுஜன கூட்டணி ' இரு வாரத்திற்கு பிறகு உதயமாகும்

பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து ' ஸ்ரீ லங்கா பொதுஜன கூட்டணி ' என்ற பெயரில் உத்தேச ஜனாதிபதி தேர்தலுட்பட இடம் பெறவுள்ள தேர்தல்களில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

புதிய கூட்டணி குறித்த தீர்மானங்கள் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் முழுமையடைந்து சில உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்களும் விடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் விஜயராம மாவத்தையில் உள்ள இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்ரீ லங்கா பொதுஜன கூட்டணியின் 55 சதவீத பிரதிநிதித்துவம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், மிகுதி 45 சதவீத பிரதிநிதித்துவம் ஏனைய பங்காளி கட்சிகளுக்கும் வழங்குமாறு கட்சி தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு ஏகமனமாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய கூட்டணி உருவாக்கத்திற்கு தடையாக உள்ள ஒரு சில காரணிகள் தொடர்பில் முறையான தீர்மானத்தை மேற்கொள்ள இரண்டு வார காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வதற்கு தற்போதும் அரசியல் சார்பற்ற அமைப்புக்களும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதால் இரண்டு வாரத்திற்கு பின்னர் உத்தியோகப்பூர்வமான அறிவிப்புக்கள் விடுக்கப்படும் என்றார்.

ad

ad